கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக 30 ஆயிரம் வாக்காளர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது முறையாக சேர்க்கப்படவில்லை. இது குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, திமுக சட்டத் துறை செயலாளர் கிரிராஜன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "கரூரில் 30 ஆயிரம் வாக்காளர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, இது முறையாக சேர்க்கப்படவில்லை, கிருஷ்ண ராயப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியிலுள்ள வாக்காளர்களை கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சேர்த்துள்ளனர். சேர்க்கப்பட்ட வாக்காளருடைய பெயர் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய வயது, எந்த விவரங்களும் சேர்க்கப்படவில்லை.
இது குறித்து திமுக கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில் பாலாஜி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளார். அதிமுக அமைச்சர் கரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதால் கூடுதலாக வாக்காளர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
உடனடியாக கரூர் தொகுதியில் ஆன்லைன் மூலமாக 6, 6ஏ,7, 8 மற்றும் 8ஏ விண்ணப்பங்கள் எவ்வளவு வந்திருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சென்டாக் கலந்தாய்வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை!