ETV Bharat / state

தகவல், ஆலோசனை மையம் அமைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு - தமிழ்நாடு அரசு

சென்னை: பொதுமக்கள் மனை பிரிவு, கட்டட அனுமதி தொடர்பான விதிமுறைகளை பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக தகவல், ஆலோசனை மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

statement
author img

By

Published : Jul 30, 2019, 7:30 PM IST

தமிழ்நாடு வீட்டு வசதித் துறை, நகர்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "பொதுமக்கள், மனை பிரிவு, கட்டட அனுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசனைகளைப் பெற ஏதுவாக நகர் ஊரமைப்புத் துறை இயக்குனர் அலுவலகம், அனைத்து சார்நிலை அலுவலகங்களிலும் தகவல் மற்றும் ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் பணியாற்ற வேண்டிய அலுவலர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு அலுவலர் என சுழற்சி முறையில் மையத்தின் அலுவலர்களாகப் பணியாற்றுவர். சம்பந்தப்பட்ட பிரிவின் பொது தகவல் அலுவலர் விடுப்பில் இருக்கும்பட்சத்தில் சுழற்சி முறையில் அடுத்த பிரிவு பொது தகவல் அலுவலர் அந்த வாரத்தில் மையத்தின் பணிகளை கவனித்துக்கொள்வார்.

மேலும் பொது தகவல் அலுவலர் விடுப்பில் இருக்கும்பட்சத்தில் உதவி பொது தகவல் மற்றும் ஆலோசனை அலுவலர் பணி மேற்கொள்வார். 'தகவல் மற்றும் ஆலோசனை மையம் அலுவலரின் பணிகள்' மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். மேலும் திட்ட அனுமதி தொடர்பான விண்ணப்பம் பெறப்பட்ட அலுவலகத்தில் பரிசீலனையில் உள்ள கோப்புகளில் நிலை பற்றி விவரங்கள் தெரிவிக்கவேண்டும். ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட மனைப்பிரிவுகள் கட்டட வரைபடங்கள் சம்பந்தமாக நகல் வழங்க கூறும் கோரிக்கைகளுக்கு உரிய விபரங்கள் அனுப்பப்பட்டு வாய்மொழியாக விவரங்களை தெரிவிக்க கூறும் நபர்களுக்கு பதிவேடுகளை சரிபார்த்து விவரங்கள் வழங்கப்படும்.

அலுவலகத்தில் நேரில் பெறப்படும் அனைத்து வகையான விண்ணப்புக்காரர்கள் பற்றி பரிசீலிக்கப்படும். மேலும் நேரில் வரும்போது மக்களின் வாய்மொழி கோரிக்கைகளுக்கு உரிய விவரங்கள் அளிக்கப்படும். அனுமதியற்ற கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம், கல்வி நிறுவனங்களுக்கான கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம் போன்ற சிறப்பு திட்டங்கள் சம்பந்தமாக வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் விவரங்கள் வழங்கப்படும்.

தகவல் மற்றும் ஆலோசனை மையத்தின் கூறுகள் பொதுமக்களுக்கு ஆலோசனை, தகவல் வழங்கும்போது தினமும் பயன்பெறுவோரின் பெயர், முகவரியுடன் கூடிய பதிவேடு பராமரிக்கப்படும். விவரங்கள் விரைவாக வழங்க ஏதுவாக மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி சம்பந்தமான பதிவுகள், அனைத்து விவரங்கள் அடங்கிய கணினி ஒன்று இதற்காக அலுவலர்களால் பயன்படுத்தப்படும். மேலும் அலுவலகத்தில் விளம்பரப் பலகை பராமரிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:*பொதுமக்கள் மனை பிரிவு மற்றும் கட்டட அனுமதி தொடர்பான விதிமுறைகளை பொதுமக்கள் அறிந்துகொள்வதற்கு ஏதுவாக தகவல் மற்றும் ஆலோசனை மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,

பொதுமக்கள், மனை பிரிவு மற்றும் கட்டட அனுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசனைகளைப் பெற ஏதுவாக நகர் ஊரமைப்புத் துறை இயக்குனர் அலுவலகம் மற்றும் அனைத்து சார்நிலை அலுவலகங்களிலும் தகவல் மற்றும் ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் சுற்றறிக்கை வெளிடப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தில் பணியாற்ற வேண்டிய அலுவலர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு அலுவலர் என சுழற்சி முறையில் மையத்தின் அலுவலர்களாகப் பணியாற்றப்படுவார். சம்பந்தப்பட்ட பிரிவின் பொது தகவல் அலுவலர் விடுப்பில் இருக்கும் பட்சத்தில் சுழற்சி முறையில் அடுத்த பிரிவு பொது தகவல் அலுவலர் அந்த வாரத்தில் மையத்தின் பணிகளை கவனித்துக் கொள்வார் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பொது தகவல் அலுவலர் விடுப்பில் இருக்கும் பட்சத்தில் உதவி பொது தகவல் மற்றும் ஆலோசனை அலுவலர் பணி மேற்கொள்வார்.

*தகவல் மற்றும் ஆலோசனை மையம் அலுவலரின் பணிகள்*

மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி தொடர்பான விதிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்படும். மேலும் திட்ட அனுமதி தொடர்பான விண்ணப்பம் பெறப்பட்ட அலுவலகத்தில் பரிசீலனையில் உள்ள கோப்புகளில் நிலை பற்றி விவரங்கள் தெரிவிக்கவேண்டும்.

ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட மனைப்பிரிவுகள் கட்டிட வரைபடங்கள் சம்பந்தமாக நகல் வழங்க கூறும் கோரிக்கைகளுக்கு உரிய விபரங்கள் அனுப்பப்பட்டு வாய்மொழியாக விவரங்களை தெரிவிக்க கூறும் நபர்களுக்கு பதிவேடுகளை சரிபார்த்து விபரங்கள் வழங்கப்படும்

அலுவலகத்தில் நேரில் பெறப்படும் அனைத்து வகையான விண்ணப்பப்புகார்கள் பற்றி பரிசீலிக்கப்படும் மேலும் நேரில் வரும் பொது மக்களின் வாய்மொழி கோரிக்கைகளுக்கு உரிய விவரங்கள் அளிக்கப்படும்

அனுமதியற்ற கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம், கல்வி நிறுவனங்களுக்கான கட்டடங்களை வரன்முறைப்படுத் திட்டம் போன்ற சிறப்பு திட்டங்கள் சம்பந்தமாக வாய்மொழியாகவும் எழுத்து மூலமாகவும் விபரங்கள் வழங்கப்படும்.

*தகவல் மற்றும் ஆலோசனை மையத்தின் கூறுகள்*

பொதுமக்களுக்கு ஆலோசனை மற்றும் தகவல் வழங்கும் பொழுது தினமும் பயன்பெறுவோரின் பெயர் மற்றும் முகவரியுடன் கூடிய பதிவேடு பராமரிக்கப்படும்.

விபரங்கள் விரைவாக வழங்க ஏதுவாக மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி சம்பந்தமான பதிவுகள் மற்றும் அனைத்து விவரங்கள் அடங்கிய கணினி ஒன்று இதற்காக அலுவலர்களால் பயன்படுத்தப்படும். மேலும் அலுவலகத்தில் விளம்பரப் பலகை பராமரிக்கப்படும்.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.