ETV Bharat / state

மதுபோதையில் ஹோட்டல் ஊழியரை தாக்கிய விவகாரம் - 3 பேர் கைது! - hotel employees attacked three arrested

தாம்பரம் அருகே உணவகத்தில் பார்சல் கட்டும் போது வறுத்தக் கறியில் மசாலா இல்லை என கூறி மதுபோதையில் உரிமையாளர் மற்றும் ஊழியரை தாக்கிய சிறார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறார் உட்பட  மூவர் கைது!
சிறார் உட்பட மூவர் கைது!
author img

By

Published : Jun 15, 2022, 6:22 AM IST

சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் ராஜா, இவர் எம்.ஜி.ஆர் நகர் அருகே பாஸ்ட் புட் உணவகம் நடத்தி வருகிறார். இவரது உணவகத்தில் நேற்று சொகுசு காரிலிருந்து இறங்கிய மூன்று பேர் உணவகத்திற்கு சென்று பரோட்டா மற்றும் வறுத்தக் கறி பார்சல் செய்யுமாறு கேட்டுள்ளனர்.

அப்போது வறுத்த கறியில் மசாலா இல்லை என்று கூறி உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அவர்கள் அடிதடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் அங்கு சென்ற போலீசார், உணவகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து தகராறில் ஈடுபட்ட சிறார் உட்பட மதுராந்தகம் அரவிந்த் (22), ரோஹித் விக்கி (27) சேலையூர் பாரத் நகர் சதீஷ்குமார் (20) ,ஆகிய மூன்று பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: CCTV:வறுத்த கறியில் மசாலா இல்லை... கடை உரிமையாளரை தாக்கிய கும்பல்...- போலீஸ் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.