ETV Bharat / state

நீர்த்தேக்கத்தை நாட்டு மக்களுக்கு ஆர்ப்பணிக்கும் உள்துறை அமைச்சர்! - home minister

சென்னை: கண்ணன்கோட்டை- தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21ஆம் தேதி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

நீர்த்தேக்கத்தை நாட்டு மக்களுக்கு ஆர்ப்பணிக்கும் உள்துறை அமைச்சர்!

author img

By

Published : Nov 19, 2020, 10:36 PM IST

தமிழ்நாடு முழுவதும் நீர்த்தேக்கங்களை உருவாக்குதல், சிறிய மற்றும் பெரிய அளவிலான தடுப்பணைகள், படுகை அணைகள், புதிய ஏரிகள், கசிவு நீர் குட்டைகள் மற்றும் நீர்நிலைகளை அமைத்தல் போன்ற பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏரிகள், 89 நீர்த்தேக்கங்கள், குளங்கள், ஊரணிகள் மற்றும் குட்டைகள் ஆகியவை குடிமராமத்து திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களின் மூலம் புனரமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூபாய் 1000 கோடியில் தடுப்பணைகள் கட்டும் மூன்றாண்டு திட்டத்தின்கீழ் இதுவரை 164 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. கடைமடை வரை தண்ணீர் விரைந்து செல்லும் வகையில் காவேரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிகள் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டம், நடந்தாய் வாழி காவேரி திட்டம், நதிகள் இணைப்புத்திட்டம் ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஏற்கனவே உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு நீர்த்தேக்கங்களுடன் ஐந்தாவது நீர்த்தேக்கமாக கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம் ரூபாய் 380 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்கு அர்ப்பணிக்க தயார் நிலையில் உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தை, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21ஆம் தேதி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்நீர்த்தேக்கத்திற்க்காக மொத்தம் ஆயிரத்து 485.16 ஏக்கர் நிலப்பரப்பு கையகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்காக பாலவாக்கம்-சத்தியவீடு சாலையில் ஒரு பகுதியை மாற்று சாலையாக 3.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீருக்காக உள்வாங்கி கோபுரம் அமைக்கப்பட்டு சேமிப்பு நீரினை நாள் ஒன்றுக்கு 66 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தினால், நீர்த்தேக்கம் அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடிநீர் உயரும். தற்போது பெய்துவரும் பருவ மழையினால் நீர்த்தேக்கத்தில் 138 மில்லியன் கனஅடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் இத்தகைய நீர் மேலாண்மைத் திட்டங்களை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள். முதலமைச்சரின் இத்தகைய நீர் மேலாண்மைத் திட்டங்களையும் சிறப்பான செயல்பாடுகளையும் பாராட்டி மத்திய ஜல்சக்தித் துறை தமிழ்நாடு சிறந்த மாநிலம் மற்றும் முதல் மாநிலம் என அறிவித்து, தமிழ்நாட்டிற்கு 2019ஆம் ஆண்டிற்கான தேசிய நீர் விருதை வழங்கி பாராட்டியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.