நிவர் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்பு, கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் நிவர் புயல் வந்துகொண்டிருக்கிறது. இந்தப் புயல் கடலோர மாவட்டங்களில் கரையைக் கடக்க உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் அதிதீவிர கனமழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை (நவ.26) விடுமுறை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதன்படி நாளை 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை (மயிலாடுதுறை), திருவாரூர், வேலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
மேலும் விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைக்கான பணிகள் மட்டும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிவர் புயல்: 'தமிழ்நாட்டில் நாளை அரசு விடுமுறை' - முதலமைச்சர்