ETV Bharat / state

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க ஹிந்துஜா குழுமம் தயார்?

சென்னை: கடன் சுமையில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை தற்போது ஹிந்துஜா குழுமம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ்
author img

By

Published : Jan 3, 2020, 3:54 PM IST

நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடன் சுமையால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதன் சேவைகள் நிறுத்தியுள்ளது.

இந்த நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்புக்கு எட்டாயிரத்து 230 கோடி ரூபாயும், ஊழியர்கள், கடனாளர்களுக்கு ஆறாயிரத்து 400 கோடி ரூபாயும் கடன் பாக்கி வைத்துள்ளது.

கடனை திரும்பப் பெற வங்கிகள், கடனாளர்கள் ஜெட் ஏர்வேஸ் விற்பனையை நம்பி காத்திருக்கும் நிலையில், பல்வேறு காரணங்களால் அதில் சிக்கல் நீடித்துவருகிறது. இதனை வாங்க விருப்பமுள்ளவர்களுக்கான விண்ணப்ப காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை.

ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ்

இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஹிந்துஜா குழுமம் வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க விருப்ப மனு அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து, அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

இதையும் படிங்க: அமீரகத்தில் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை.
!

Intro:Body:

கடன் சுமையில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஹிந்துஜா குழுமம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை:

நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடன் சுமையால் கடந்த ஏப்ரல் மாதம் தரையிறக்கப்பட்டது. தற்போது அதன் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்புக்கு ரூ.8230 கோடி ரூபாயும், ஊழியர்கள், கடனாளர்களுக்கு ரூ.6,400 கோடி ரூபாயும் கடன் பாக்கி வைத்துள்ளது. கடனை திரும்பப் பெற, வங்கிகள், கடனாளர்கள் ஜெட் ஏர்வேஸ் விற்பனை நம்பி காத்திருக்கும் நிலையில், பல்வேறு காரணங்களால் அதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனை வாங்க விருப்பமுள்ளவர்களுக்கான விண்ணப்ப காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்டும் எதிர்பார்த்த முடிவு கிடைக்கவில்லை. இந்த நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஹிந்துஜா குழுமம் வரும் ஜனவரி 15 ஆம் தேதிக்குள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க விருப்ப மனு தாக்கல் செய்யவுள்தாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது குறித்து அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. ஜெட் ஏர்வேஸின் கடன் பிரச்னையில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்பட்சத்தில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க தயாராக உள்ளதாக ஹிந்துஜா நிறுவன தலைவர்களில் ஒருவரான கோபிசந்த் கூறியிருந்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஹிந்துஜா குழுமத்தின் கீழ் பிரபல கன ரக வாகன நிறுவனமான அஷோக் லேலாண்ட், இன்டஸ்இன்ட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.