ETV Bharat / state

vinayagar chaturthi : விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் குழப்பம்.. அரசுக்கு இந்து முன்னணி கோரிக்கை! - சி சுப்பிரமணியம்

Leave change for vinayagar chaturthi 2023: விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளை விடுமுறையாக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசை கண்டிக்கிறோம் எனவும், உடனடியாக மாற்று அறிவிப்பு அரசாணை வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விடுமுறை நாளை மாற்ற கோரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 1:21 PM IST

சென்னை: இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டின் தமிழ்நாடு அரசின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு ஜனவரியில் வந்த போதே அதில் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 17 ஞாயிறு என்று இருந்ததை சுட்டிக்காட்டி உடனே திருத்தம் வெளியிட இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொண்டோம்.

ஆனால், தமிழ்நாடு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் இது குறித்து எடுக்கவில்லை. இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும் உள்நோக்கம் கொண்டது. கிறித்துவ, முஸ்லீம் பண்டிகைகள் குறித்து அந்த மதத் தலைவர்களை ஆலோசித்து அதனை அறிவிக்கும் தமிழ்நாடு அரசு, இந்துக்களின் பண்டிகைகள் பற்றிய விபரத்தை தான்தோன்றித்தனமாக அறிவிப்பது அறிவுடைய செயல் இல்லை.

தமிழ்நாட்டில் சுமார் 8 சதவீதம் முஸ்லீம்கள் உள்ளனர். ரம்ஜான் விடுமுறை குறித்து வருடத்தின் ஆரம்பத்தில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டாலும், முதல் நாள் மாலை ஹாஜியின் கண்களுக்கு பிறை தெரியவில்லை என்றால் அதற்கு அடுத்த நாள் ரம்ஜான் விடுமுறையை மாற்றி தமிழ்நாடு அரசு கெஜட் - அரசாணை அவசரம் அவசரமாக அன்று மாலையே வெளியிடுகிறது.

அதுவே, தமிழ்நாட்டில் 88 சதவீதம் உள்ள இந்துக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை தவறான தேதியில் அறிவித்ததை இந்து முன்னணி மற்றும் ஆன்மிக பெரியவர்கள் கருத்துக்களை சுட்டிக்காட்டிய பின்னரும் தமிழ்நாடு அரசு திருத்தி அரசாணை வெளியிடாததை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் இந்துக்களை அவமானப்படுத்தும் செயலாக இது இருக்கிறது.

ஞாயிறு அன்று தேவையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு ஊழியர்கள் ஒருநாள் விடுமுறை இல்லாமல் போனாலும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் இதுவரை இது குறித்து கருத்து தெரிவித்ததாக தெரியவில்லை. இது அந்த சங்கங்களின் திமுக விசுவாசத்தால் உண்மையை பேசுவதற்கு தயங்கலாம்.

ஆனால், இந்துக்கள் கொண்டாடும் பண்டிகை நாளில் அரசு அலுவலகங்கள் செயல்படுவது இந்துக்களின் சமய விழாவிற்கு இடையூறாக இருக்கும். மேலும், அரசு ஊழியர்களின் குடும்பங்களில் உள்ளவர்கள் விநாயகரை பக்திப் பூர்வமாக கொண்டாடுவதும் தடைபடும்.

எனவே, இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி பண்டிகை அரசு விடுமுறை செப்டம்பர் 18 என உடனடியாக அரசாணை வெளியிடுமாறு இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இந்த குழப்பத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலத்தில் இது போன்ற குழப்பங்கள் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, செப்டம்பர் 18 விநாயகர் சதுர்த்தி பண்டிகை அரசு விடுமுறை என அறிவிப்பை வெளியிடவில்லை என்றால், தமிழ்நாடு அரசின் இந்து விரோதப் போக்கை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், மாநில அரசு அலுவலகங்கள் முன்பு மக்களை ஒருங்கிணைத்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்த நேரிடும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. விதவிதமாக தயாராகும் விநாயகர் சிலைகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.