ETV Bharat / state

Hijavu Scam: ஹிஜாவு மோசடியில் தம்பதி கைது: ரூ.500 கோடி சுருட்டியது அம்பலம்!

சென்னை ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வந்த சென்னையை சார்ந்தன் தம்பதி கைது செய்யப்பட்டனர். மக்களிடமிருந்து 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Hijavu Scam
ஹிஜாவு மோசடி
author img

By

Published : Jun 17, 2023, 7:16 PM IST

சென்னை: கீழ்ப்பாக்கத்தி இயங்கி வந்த ஹிஜாவு நிதி நிறுவனம் மோசடி புகாரில் சிக்கியுள்ளது. இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த பொதுமக்களுக்கு 15% வட்டி தருவதாக கூறி ரூ.4,400 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து இதுவரை 14 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 3,34,000 பணம், 448 கிராம் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி, ரூ.80 லட்சம் மதிப்புள்ள எட்டு கார்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் 162 வங்கி கணக்குகளில் இருந்த ரூ.14.47 கோடி முடக்கப்பட்டு, ரூ.75.6 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் மற்றும் ரூ.90 கோடி மதிப்புள்ள 54 அசையும் சொத்துக்கள் கண்டறியப்பட்டு சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டள்ளன.

மேலும் அந்த நிறுவனத்தின் இயக்குநரான அலெக்சாண்டர், முகவர்கள் உட்பட மோசடி கும்பல் தொடர்ந்து வெளிநாடுகளில் தலைமறைவாகி விட்டனர். எனவே பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவர்களுக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுத்து, இவர்களை பற்றி துப்பு கொடுத்தால் தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த மே மாதம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட ஹிஜாவு நிறுவனத்தை சேர்ந்த 15 நபர்களின் புகைப்படத்த வெளியிட்டிருந்தனர்.

இதையும் படிங்க: ஹிஜாவு நிதி மோசடி வழக்கில் சிக்கிய ஏஜென்ட் தற்கொலை

இந்த நிலையில் இவ்வழக்கில், ஹிஜாவு நிதி நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட்ட சுஜாதா கந்தா மற்றும் அவரது கணவரும் ஐ.சி.எப் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிபவருமான கோவிந்தராஜுலு ஆகிய இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தம்பதி பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி சுமார் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவர்களிடமிருந்து சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மற்றும் பல கோடி ரூபாய் பணம் இருப்பு உள்ள வங்கி கணக்கை முடக்கி இருப்பதாகவும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட தம்பதியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மோசடி செய்யப்பட்ட பணத்தில் எங்கெல்லாம் இவர்கள் சொத்துக்கள் குவித்துள்ளனர் என்பது தொடர்பாக விசாரணை செய்வதற்காக, தம்பதியை போலீஸ் காவலில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஹிஜாவு நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த கல்லூரி மாணவி தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.