ETV Bharat / state

சென்னை-மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயிலின் சோதனை வெற்றி; அதன் சிறப்பம்சங்கள் என்ன? - Vande Bharat train trial run successful

அதிக சிறப்பம்சங்கள் நிறைந்த சென்னை-மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.

சென்னை-மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்

author img

By

Published : Nov 7, 2022, 10:39 PM IST

சென்னை: சென்னை-மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் சென்னை எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெற்றிகரமாகத் தொடங்கியது. இந்த ரயிலில் அதிகளவில் சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன.

தென்னிந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் அதிவேக விரைவு ரயில், வந்தே பாரத். இந்த ரயிலானது நவம்பர் 11ஆம் தேதி முறையாக பிரதமர் மோடியால் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. முதலில் 'ரயில் 18' என்று பெயரிடப்பட்ட 'வந்தே பாரத் ரயில்', சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலையில் (ICF) தயாரிக்கப்பட்டது.

இந்த சோதனை ஓட்டம், ரயில் பெட்டி, வழித்தடம், சிக்னல்கள் மற்றும் லெவல் கிராசிங் கேட்ஸ், பிளாக் வேலை போன்ற இதர பாதுகாப்பு அளவுருக்களின் செயல்பாடுகளை ரயில் இயக்கும் குழுவினருக்குத் தெரிந்துகொள்ளவும், ரயில் உட்புறம் மற்றும் உள் பெட்டி பராமரிப்புக்குழுவினருக்குத் தெரியப்படுத்தவும் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது.

ரயிலின் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. ரயிலில் 1,128 இருக்கைகள் உள்ளன. ரயிலின் 16 பெட்டிகளும் தானியங்கி கதவுகளும் உள்ளன. ஜிபிஎஸ் அடிப்படையிலான ஆடியோ விஷுவல் பயணிகள் தகவல் அமைப்பு, பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக ஆன்போர்டு ஹாட்ஸ்பாட் வைஃபை மற்றும் மிகவும் வசதியான இருக்கைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. நிர்வாக வகுப்பிலும் சுழலும் நாற்காலிகள் உள்ளன.

சென்னை-மைசூரு இடையேயான வந்தே பாரத் ரயிலின் சோதனை வெற்றி; அதன் சிறப்பம்சங்கள் என்ன?

இந்த ரயில் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 5:50 மணிக்குப் புறப்பட்டு பெங்களூரு சிட்டி சந்திப்பை காலை 10:25 மணிக்குச் சென்றடையும். பெங்களூருவில் இருந்து காலை 10:30 மணிக்குப் புறப்பட்டு, மதியம் 12:30 மணிக்கு இறுதி இலக்கான மைசூருவை சென்றடையும். இந்த ரயில் சுமார் 497 கி.மீ., தூரத்தை 6 மணி 40 நிமிடங்களில் கடக்கும் மற்றும் வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும்.

மேலும் அதன் வழக்கமான அட்டவணையில், இந்த ரயில் பெங்களூரு கேஆர்எஸ்-ல்(KRS) நிறுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை தவிர, வாரத்தில் ஆறு நாட்களும் இந்த சேவை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விரைவு ரயிலின் மூலம் மக்களின் நேரம் அதிகளவில் சேமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கட்டடங்கள் விதிமீறல் வழக்கு - நகர், ஊரமைப்புச்சட்டத்தை திரும்பப்பெற நீதிமன்றம் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.