ETV Bharat / state

கீழடி விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? - உயர்நீதிமன்றம் கேள்வி - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கீழடி அகழாய்வு பணிகள் முடிந்தால் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும் எனத் தெரிந்தும், இந்த விஷயத்தில் மத்திய அரசு இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Mar 16, 2019, 11:29 AM IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014 ஆம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. நான்கு கட்டமாக நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி ஆய்வுப் பணியில், 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான, தொன்மையான நாகரீகங்கள் குறித்த தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும் வெளிநாட்டுடன் வணிகத்தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்களும் கீழடி தொல்பொருள் ஆய்வில் கிடைத்துள்ளது. இதனால் 5-ம் கட்ட ஆய்வுப்பணிகளில் மேலும் பல தொல்பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 5-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கான நிதியை மத்திய, மாநில அரசு இதுவரை ஒதுக்கப்படாததால் அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மேலும் அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்த தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்துக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து அமர்நாத்தின் பணியிடை மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, கீழடி அகழாய்வு பணிகள் முடிந்தால் தமிழகத்தின் பெருமை உலகளவில் அங்கீகரிக்கப்படும் எனத் தெரிந்தும், இந்த விஷயத்தில் மத்திய அரசு இவ்வளவு பிடிவாதமாக இருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பியது. மேலும், அசாமுக்கு மாற்றப்பட்ட அமர்நாத்தை, 15 நாட்களில் தமிழகத்துக்கு பணிமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, விசாரணையை மார்ச் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Intro:Body:

http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/60440-why-is-the-central-government-stubborn-in-the-keeladi-excavation-matter-hc.html

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.