ETV Bharat / state

மால்கள், திரையரங்குகளை ஆய்வுசெய்ய அரசுக்கு உத்தரவு - திரையரங்குகள்

தமிழ்நாடு முழுவதிலுமுள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள், கழிப்பறை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து அடிக்கடி ஆய்வுசெய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court order  high court order to tamil nadu government  tamil nadu government  chennai high court  chennai news  chennai latest news  theaters  malls  சென்னை செய்திகள்  சென்னை உயர்நீதிமன்றம்  தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு  தமிழ்நாடு அரசு  உயர்நீதிமன்றம்  திரையரங்குகள்  மால்கள்
உயர்நீதிமன்றம்
author img

By

Published : Oct 4, 2021, 2:02 PM IST

சென்னை: பெரம்பூரில், எஸ் டூ ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள திரையரங்கில், வாட்டர் பாட்டில்கள், குளிர்பானங்கள், உணவுப்பொருள்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது சட்டப்படி தவறானது என்றும் இதன் மூலம் பல லட்ச ரூபாய் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக முறையான விசாரணை செய்து, உரிய நபர்கள் மீது குற்றவியல் வழக்கு தொடர உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

12,60,000 அபராதம்

இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பான புகார் குறித்து சோதனை செய்வதாகவும், அதில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021 ஜூலை மாதம் வரை, 12 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளனவா என சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அவ்வப்போது சென்று ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: மீண்டும் களைகட்டுமா? - தீபாவளியை எதிர்நோக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.