ETV Bharat / state

’தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவியல்பூர்வ ஆலோசனை தேவை’ - உயர் நீதிமன்றம்

ஊரடங்கு காலத்தில் சத்துணவு கிடைக்காமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராமப்புறங்களில் தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்த அறிவியல்பூர்வ ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court order to primary school  chennai news  chennai latset news  chennai high court order  chief justice Sanjib Banerjee  Sanjib Banerjee  chennai high court order to tamilnadu government  tamilnadu government  சத்துணவு திட்டம்  அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறக்க உத்தரவு  சத்துணவு  அங்கன்வாடி  தொடக்கப்பள்ளி  primary schools  தலைமை நீதிபதி  சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Jul 28, 2021, 2:39 PM IST

Updated : Jul 29, 2021, 8:45 PM IST

சென்னை: கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சத்துணவு மாணவர்களுக்கு சமைக்கப்பட்ட உணவை வழங்க உத்தரவிடக் கோரி “சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப்” என்ற அமைப்பின் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஜூலை.28) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவு இல்லாமல் மாணவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சத்துணவுத் திட்டம் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருள்களை பெற்றோர், பொருளாதார பாதிப்பு காரணமாக விற்றுவிடுகின்றனர்” என்றார்.

மேலும் அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறந்து, அவற்றின் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தார். இதுகுறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞரும் கூறினார்.

இதையடுத்து, “கரோனாவின் தாக்கம் தணிந்துள்ளதாலும், மூன்றாவது அலை தாக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமாக எந்த கணிப்பும் இல்லாததாலும், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல்பூர்வமாக ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும்” என தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாணவர்களுக்கு சத்துணவு சென்றடையச் செய்வதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி கேட்க மறுப்பு!

Last Updated : Jul 29, 2021, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.