ETV Bharat / state

தி.நகர் விளையாட்டு விநாயகர் கோயிலை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

vilayattu vinayagar temple: சென்னை தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் இருக்கும் விளையாட்டு விநாயகர் கோயில் சிலைகளை வேறு இடத்திற்கு மாற்றிய பிறகு இடிக்க தெற்கு ரயில்வே மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தி நகர் விளையாட்டு விநாயகர் கோயிலை இடிக்க

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 10:43 PM IST

சென்னை: தியாராய நகர் (T.Nagar) பேருந்து நிலையத்தில் இருந்து, மாம்பலம் ரயில் நிலைய நடைமேடை பாலத்துடன் இணைப்பதற்காக பாலம் கட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அதற்காக, ரங்கநாதன் தெரு ரயில்வே பார்டர் சாலையில் அரசு நிலத்தில் அமைந்திருந்த விளையாட்டு விநாயகர் கோயில் மற்றும் 22 ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த நடவடிக்கைகளை எதிர்த்து நான்கு வாடகைதாரர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 2018ஆம் ஆண்டு இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் ஆகியோர், கோவில் அமைந்துள்ள நிலம், கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று கூறினர்.

மேலும், வருவாய் துறை ஆவணங்களில் மூலம் கோயில் அரசு நிலத்தில் இருப்பது தெளிவடைந்தவதாக கூறி, 15 நாட்களில் கோயிலில் உள்ள சிலைகளை வேறு இடத்துக்கு மாற்றி விட்டு, கோயிலை இடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து, ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற உத்தரவிட்டு, சிலைகளை குறிப்பிட்டப்பட்ட நாட்களில் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த கோவில் நிர்வாகம் தவறினால், உரிய நடவடிக்கைகளை எடுக்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, வழக்குகளை தள்ளுபடி செய்தனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுப்பு: உள்துறை செயலாளர், டிஜிபி விளக்கமளிக்க நீதிமன்றம் ஆணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.