சென்னை: சத்ய ஜோதி பிலிம்ஸ் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா கூட்டணி எப்போதும் வெற்றிகரமான திரைப்படங்களையே தந்துள்ளது. அடுத்ததாக இவர்கள் கூட்டணியில் வெளியான ’சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு’ திரைப்படங்கள், மிகப்பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது இதே கூட்டணி மீண்டும் ‘வீரன்’ திரைப்படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
ஏஆர்கே சரவணன் ஏற்கனவே ’மரகத நாணயம்’ என்ற வெற்றிப்படத்தை இயக்கியவர். “வீரன்” படத்தின் படப்பிடிப்பு இன்று (மே25) காலை பொள்ளாச்சியில் எளிமையான சடங்குகளுடன் இனிதே தொடங்கியது. படக்குழுவினர் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்புவார்கள். இந்த திரைப்படம் ஒரு பேன்டஸி காமெடி ஆக்ஷன் என்டர்டெய்னர். இதில் ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்கிறார். மேலும் முனீஷ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.
’வீரன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது மட்டுமின்றி ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:மிஸ் இந்தியா போட்டியில் ஹிப்-ஹாப் ஆதியின் ஹீரோயின்