ETV Bharat / state

சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை: தரையிறங்க முடியாமல் தவித்த விமானங்கள்! - Heavy rain in chennai

சென்னை: சென்னையில் திடீரென பெய்த பலத்த மழையால் மூன்று விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

Heavy rains with hurricane force winds in Chennai: Planes stranded unable to land ...

author img

By

Published : Jul 28, 2020, 10:03 PM IST

சென்னை புறநகா் பகுதிகளில் இன்று (ஜூலை28) மாலை பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் பெய்த மழையால் சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஹைதராபாத்திலிருந்து 220 பயணிகளுடன் சென்னை வந்த விமானம், மதுரையிலிருந்து 75 பயணிகளுடன் வந்த விமானம், வாரணாசியிலிருந்து 78 பயணிகளுடன் வந்த இண்டிகோ ஏர் லைன்ஸை சேர்ந்த மூன்று விமானங்களும் பலத்த மழை, சூறைக்காற்று காரணமாக சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

அதைப்போல் 45 பயணிகளுடன் டெல்லியிலிருந்து வந்த விமானமும், 69 பயணிகளுடன் தூத்துக்குடியிலிருந்து வந்த விமானமும் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானிலேயே நீண்ட நேரமாக வட்டமடித்தன. அதன் பின்பு மாலை 5.30 மணிக்கு மேல் மழையின் வேகம் குறைந்ததும் சென்னையில் தரையிறங்கின.

அதைப்போல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 3 விமானங்களும் இரவு 7 மணிக்கு மேல் ஒன்றன்பின் ஒன்றாக சென்னைக்கு திரும்பின.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.