கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவான புயல், நேற்று மாலை வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், இதற்க்கு 'கியார்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் தீவிரமடைந்துள்ளதாலும் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதலே மழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 3 மணியளவில் பெய்து வந்த பலத்த மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்தார். நகரின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குமரி கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் என்பதால், கனமழை தொடர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இதேபோல் தூத்துக்குடி, விருதுநகர், வேலூர், திண்டுக்கல், தருமபுரி, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்துள்ளனர்.
இதையும் படிங்க:பள்ளி விடுமுறை அறிவிப்பதில் தாமதம்: மழையால் வீடு திரும்ப முடியாமல் தவித்த மாணவர்கள்!