ETV Bharat / state

அம்மா மினி கிளினிக் மூடல் - பேரவையில் காரசார விவாதம் - அம்மா மினி கிளிக் மூடல்

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் திட்டம் முடக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக, திமுகவினரிடைய சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

அம்மா மினி கிளிக் மூடல்
அம்மா மினி கிளிக் மூடல்
author img

By

Published : Jan 6, 2022, 3:54 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 5) ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. இன்று (ஜனவரி 6) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விவாதம் நடைபெற்றது. அப்போது, பேசிய அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம் அம்மா மினி கிளிக் திட்டம் மூடப்பட்டதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "அம்மா மினி கிளினிக் சுடுகாடு, கழிவறை, காரிய மண்டபங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதை நேரில் அழைத்துச் சென்று காண்பிக்கத் தயார்" எனப் பேசினார்.

இடையே பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அம்மா மினி கிளினிக் என்னும் அற்புதத் திட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசி உள்ளதால், அமைச்சரின் கருத்தை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கைவைத்தார்.

தொடர்ந்து குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆதாரத்தோடு பேசுகிறார். அமைச்சரின் கருத்தை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை: சீமான் சொன்னார்... ஸ்டாலின் செய்கிறார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.