ETV Bharat / state

தேவையில்லாமல் ரெமிடிசிவரை பரிந்துரைக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை! - tamilnadu corona virus

சென்னை: தனியார் மருத்துவமனைகள் தேவையில்லாமல் நோயாளிகளுக்கு ரெமிடிசிவர் மருந்தினை பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராதாகிருஷ்ணன்
radhakrishnan
author img

By

Published : Apr 30, 2021, 12:46 PM IST

சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான படுக்கை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. சென்னையிலும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

போர்க்கால அடிப்படையில் 12,255 படுக்கைகள் ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு, கடந்த 2 நாள்களில் மட்டுமே 576 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மே 7ஆம் தேதிக்குள் 8,275 படுக்கைகள் தயார்நிலையில் இருக்கும்.

கரோனா பணியில் மருத்துவக்குழு இரவு பகலாக உழைத்து வருகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் 12 பரிசோதனை மையம் ஏற்பாடு செய்திருக்கிறோம். அங்கு ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே உள்ளிட்டவை எடுக்கப்பட்டு பாதிப்பு மிக்கவர்கள் சிகிச்சை மையங்களுக்கும், பாதிப்பு குறைந்தவர்கள் வீட்டுத் தனிமைக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதிக நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் பொருத்தப்பட்ட படுக்கை வசதிகள் தேவைப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை

ரெமிடிசிவர் ஒரு மாயாஜால மருந்து கிடையாது. எல்லாருக்கும் அது தேவையல்ல.ரெமிடிசிவர் இல்லையென்றால் உயிர் போய்விடும், அதை வாங்கி வாருங்கள்’, என்று அழுத்தம் கொடுத்து, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் தனியார் மருத்துவமனைகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறான தகவல்களைப் பரப்ப வேண்டும். தேவையானவர்களுக்கு ரெமிடிசிவர் மருந்துகளைத் தமிழ்நாடு அரசு நிச்சயம் வழங்கும். ஏனெனில் 30 விழுக்காடு பேருக்கு மட்டுமே இந்த மருந்து தேவை. அதுவும் பாதிப்பின் அளவை பொறுத்து அது முடிவு செய்யப்படும். எனவே தனியார் மருத்துவமனைகள் இந்த மருந்துக்காக மக்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

முகக்கவசம் அணியுங்கள்

வடமாநிலங்கள் போல தமிழ்நாட்டிலும் பாதிப்புகள் ஏற்படலாம். அதைத் தவிர்க்க முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும். நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளை முழுமையாக மதிக்கவேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் எவ்வளவு? என்பதை ஆன்-லைன் மூலமாகத் தெரிந்துகொள்ள ஏதுவாக புதிய வசதியை அறிமுகப்படுத்தவுள்ளோம்.

அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னோட்ட பணிகள் முடிந்து முடிவு திருப்தியாக அமைந்தால் இந்தப் புதிய திட்டத்தை அமல்படுத்துவோம். சமூக வலைதளத்தில் வெளியாகும் ஆதாரமற்ற தகவலைப் பொதுமக்கள் நம்பவேண்டாம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 17897 பேருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.