ETV Bharat / state

”மருத்துவர்,செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை” - மா.சுப்பிரமணியன் - chennai latest news

சென்னை: கரோனா நோயாளிகள் இறக்கும்போது மருத்துவமனை, மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

health-minister-warning-to-private-hospitals

author img

By

Published : Jun 8, 2021, 12:02 PM IST

சென்னை : இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து
மக்களின் உயிர்களைக் காத்திட தமிழ்நாடு அரசும், மருத்துவமனைகளும், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களும் அல்லும் பகலும் அயராது தம் உயிரைத் துச்சம் என மதித்து அரும் பணியாற்றி வருகின்றனர்.

இவ்வாறு களப்பணியாற்றி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையையும், பணிபுரிந்து வருபவர்களை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகையையும் முதலமைச்சர் உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

இந்நிலையில் சில நோயாளிகளின் உயிர் இழக்க நேரிடும்போது மருத்துவமனைகளில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், பிற பணியாளர்களை அந்நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளது. நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டாலும், சில நேரங்களில் உயிர் இழப்பு தவிர்க்க முடியாமல் போகிறது.

இச்சூழலில் உணர்ச்சிவசப்பட்டு மருத்துவர்களிடமும், மருத்துவமனைப் பணியாளர்களிடமும் தரக்குறைவாக நடந்துகொள்வது அவர்கள் ஆற்றிவரும் சேவையை இழிவுபடுத்துவதாக அமையும். இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது. இச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவப் பணியாளர்களும் பெரும் சேவை செய்துவரும் நிலையில், ஒரு சில மருத்துவமனைகள் இப்பேரிடர் சூழலைத் தவறாகப் பயன்படுத்தி நோயாளிகளிடம் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும், காப்பீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்காமல் அவர்களிடம் கட்டணம் கேட்பதாகவும் புகார் வந்துள்ளன.

பொதுமக்களிடம் அதிகக்கட்டணம் கோரி லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள் மீதும், மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழ்நாடு அரசு தயங்காது.தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் (முறைப்படுத்துதல்) சட்டத்தின்படி இந்த மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீதும் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நியாய விலைக்கடைகள் மீண்டும் செயல்படும் - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.