ETV Bharat / state

'தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் குறித்து ஓபிஎஸ்ஸுக்குத் தெரியுமா?' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி

தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் குறித்து ஓ. பன்னீர்செல்வத்திற்குத் தெரியுமா என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author img

By

Published : Jul 2, 2021, 3:04 PM IST

சென்னை: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் யுனிசெஃப் நிறுவனத்துடன் இணைந்து கரோனா பரப்புரை வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

கரோனா விழிப்புணர்வு

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த மா. சுப்பிரமணியன் கூறுகையில், “கரோனா தொற்று பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. கரோனா தொற்றினால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

தமிழ்நாட்டில் இரண்டாவது அலை முற்றுக்கு வந்துகொண்டிருக்கிறது என்ற நிலை இருந்தாலும், தொடர்ந்து மக்களைப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென அறிவுறுத்த வேண்டியது அரசின் கடமை.

பொதுமக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பரப்புரைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. சென்னையில் பத்து வாகனங்களில் பரப்புரை செய்யப்படவுள்ளது.

மேலும், கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்தும் இந்தப் பரப்புரையின் மூலம் கூறப்பட்டுள்ளது. இந்தத் தொற்றுக்கு ஒரே தீர்வு தடுப்பூசிதான். எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.

தடுப்பூசி விழிப்புணர்வு

மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு சுகாதாரத் துறை கடந்த இரண்டு மாதங்களாகத் தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. நீலகிரியிலுள்ள பழங்குடியினர் அனைவரும் ஜூன் மாதம் இறுதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசின் வேண்டுகோளை ஏற்று அவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

அதேபோல் நீலகிரியிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 100 விழுக்காட்டினரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஒன்றிய அரசிடமிருந்து தடுப்பூசிகள் வர வர மக்களுக்கு விரைந்து செலுத்தும் பணிகளை வேகமாகச் செய்துவருகிறோம்” எனத் தெரிவித்தார்.

‘திமுக அரசு மக்களை தடுப்பூசி செலுத்துவதில் வஞ்சிக்கும் அரசாக இருக்கிறது’ என்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மா. சுப்பிரமணியன், “மே 7ஆம் தேதிவரை அதிமுக ஆட்சியில் இருந்தது. தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஐந்து மாத காலம் அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டார்கள்.

ஓபிஎஸ் மீது அமைச்சர் தாக்கு

ஒன்றிய அரசில் நாளொன்றுக்கே 61 ஆயிரம் தடுப்பூசிகள்தான் பொதுமக்களுக்கு வழங்கினர். மே 7ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திமுக இன்று நாள்தோறும் ஒரு லட்சத்து 34 ஆயிரம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்குச் செலுத்திவருகிறது. 61 ஆயிரம் தடுப்பூசிகளைச் செலுத்திய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் இதைச் சொல்வது என்பது ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.

700 கோடி ரூபாய் செலவுசெய்து ஹெச்.எல்.எல். தடுப்பூசி நிறுவனம் தயாராக இருக்கிறது என அதிமுக கூறியது. மேலும், அங்கு தடுப்பூசி தயார் செய்யலாம் என்ற நிலை இருக்கிறது. 2019ஆம் ஆண்டு முழுமையாகப் பணிகள் நிறைவுற்று, பாஸ்டர் நிறுவனம் குன்னூரில் மூலப்பொருள்களைத் தந்தால் நாங்கள் தடுப்பூசியைத் தயார்செய்து தருவோம் எனக் கூறினார்கள்.

தடுப்பூசி தயாரிப்பதற்கு இந்த நிறுவனம் தயாராக இருந்தும், தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிமுகவுக்கு வரவேயில்லை.

ஓபிஎஸ்ஸிடம் அமைச்சர் கேள்வி

செங்கல்பட்டு ஹெச்.எல்.எல். நிறுவனம் எங்கு இருக்கிறது என்பதும், 700 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதும், தடுப்பூசி தயார் செய்வதற்கு அந்நிறுவனம் தயாராகவுள்ளோம் என அறிவித்ததும் தெரியுமா என்பதும் தெரியவில்லை.

அதேபோல் குன்னூரில் பாஸ்டர் நிறுவனம் 1903ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 303 தொழிலாளர்கள் பணிபுரியும் அந்த நிர்வாகத்தை அதிமுக ஆட்சியாளர்கள் பார்த்து இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. குன்னூர் பாஸ்டர் நிறுவனத்தில் தடுப்பூசியை உற்பத்திசெய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தெரியுமா என்பதும் தெரியவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்பட ஐந்து மாவட்டங்களில் 10 அல்லது ஐந்து அளவில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 7 மாவட்டங்களில் 3 அல்லது 4 என்ற அளவில் அதிகரித்துள்ளது.

தொற்று கூடுவதற்கான காரணத்தை ஆய்வு செய்யவுள்ளோம். தொற்று எண்ணிக்கை குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து அதே எண்ணிக்கையில் உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி, தடுப்பூசி தொழிற்சாலை எனக்கூறி விட்டு கைவிரிக்கும் திமுக அரசு’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.