சென்னை தாம்பரம் பழைய ஜிஎஸ்டி சாலையில் நகராட்சி ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.
அப்போது அங்கு அருள் நகரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்துள்ளார்.
அவரிடம் சுகாதார ஆய்வாளர் செல்வம், முகக்கவசம் ஏன் அணியவில்லை? என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் முகக்கவசம் அணிவது என்னுடைய விருப்பம் என்று ஒருமையில் பேசியுள்ளார்.
பின்னர் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகளபாக மாறியது. இதில் பலத்த காயமடைந்த சுகாதார ஆய்வாளர் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து தாம்பரம் நகராட்சி அலுவலர்கள் சேலையூர் சரக உதவி ஆணையாளரிடம் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் சுகாதார ஆய்வாளரை தாக்கிய தினேஷை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: உதகையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.50 அபராதம்