சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடிக்க ரூ.92.13 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ரூ. 9 கோடியில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம் மற்றும் நிறைவு விழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கிறது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற இருக்கிறது. உளகளவில் செஸ் போட்டியில் சிறந்து விளங்கக்கூடிய பல முன்னணி வீரர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
இதையும் படிங்க:44ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர்: ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த தமிழ்நாடு அரசு