ETV Bharat / state

நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்த அரசு - நியமனத்துக்குத் தடை  விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்! - Prohibition of appointment of a separate officer to manage the Actors' Association

நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி நியமனத்திக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Nov 8, 2019, 11:36 PM IST

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், கடந்த ஜுன் மாதம் 23ஆம் தேதி சென்னையில் நடந்தது. பல்வேறு காரணங்களுக்காக இத்தேர்தலை ரத்து செய்யக்கோரி ஏழுமலை, பெஞ்சமின் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், வழக்குகள் முடிவடையும் வரை அல்லது ஒரு ஆண்டிற்கு, நடிகர் சங்கத்தை நிர்வகிக்க, பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை தனி அதிகாரியாக நியமித்து, மாநில அரசு கடந்த நவம்பர் 6ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து விஷால் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை இன்று நாடியது.

அதனடிப்படையில், நடிகர் சங்க முன்னாள் பொருளாளர் கார்த்தி சார்பில், 'நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையிலுள்ள நிலையில், தனி அதிகாரியை நியமித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். 3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில், மூன்று உறுப்பினர்கள் மட்டும் அளித்த புகாரின் அடிப்படையில், தனி அதிகாரியை நியமித்தது சட்டவிரோதமானது. எனவே,தமிழ்நாடு அரசின் உத்தரவுக்குத் தடை விதிப்பதோடு மட்டுமல்லாமல், இவ்வழக்கை அவசர வழக்காகவும் விசாரிக்க வேண்டும்' என நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

அதன்படி, இவ்வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கல்யாணசுந்தரம் தனி அதிகாரி நியமனத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: சிலை கடத்தல் வழக்கு: இரண்டு அமைச்சர்கள் பெயரை பொன் மாணிக்கவேல் வெளியிட கோரிக்கை!

Intro:Body:நடிகர் சங்கத்தை நிர்வாகிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தனி அதிகாரி கீதா நியமனத்திக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ஏழுமலை, பெஞ்சமின் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளனர்.

இந்நிலையில், வழக்குகள் முவடையும் வரையும் அல்லது ஒரு வருடத்துக்கு நடிகர் சங்கத்தை நிர்வகிக்கவும் பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை தனி அதிகாரியாக நியமித்து தமிழக அரசு நவம்பர் 6ம் தேதி உத்தரவிட்டது.

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தனி அதிகாரி நியமித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்ய உள்ள வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்.

3000 உறுப்பினர்கள் உள்ள சங்கத்தில், மூன்று உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தனி அதிகாரி நியமித்தது சட்டவிரோதமானது என நடிகர் சங்கம் தரப்பில் நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து, நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதி கல்யாணசுந்தரம் முன் விசாரணையில் உள்ளதால் இந்த வழக்கை நீதிபதி கல்யாணசுந்தரம் முன் பட்டியலிட நீதிபதி ஆதிகேசவலு, பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

அதன்படி, முன்னாள் பொருளாளர் கார்த்திக் தொடர்ந்த வழக்கு, நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனி அதிகாரி நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, தனி அதிகாரி நியமனத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட இ வழக்கு விசாரணையை நவம்பர் 14ம தேதிக்கு ஒத்திவைத்தார்.
Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.