சிறைக்கைதிகள் பாதுகாப்பு சங்கத்தின் இயக்குநரும் வழக்கறிஞருமான புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதில் “கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அழகு சக்திவேல், கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2015 ம் ஆண்டு சிறைச்சாலையில் உள்ள இயந்திர பட்டறையில் வேலை செய்தபோது இரண்டு கைகளிலும் உள்ள விரல்கள் துண்டானது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும், விரல்கள் இயங்காத நிலையில் எட்டு ஆண்டுகளாக அடுத்தவரின் உதவியுடன் சிறையில் தனது அன்றாட வேலைகளை செய்து வருகிறார்.
மருத்துவ காரணங்களுக்காக அழகு சக்திவேலை முன்கூட்டியே விடுதலை செய்ய சிறைத்துறைக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதனால் நீதிமன்றமே அவரை விடுதலை செய்ய சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்” என அதில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எம்.எம். சுந்தரேஷ், டீக்கா ராமன் அமர்வு, பாதிக்கப்பட்டவரின் வயது மற்றும் மருத்துவ காரணங்களைக் கருத்தில்கொண்டு அவரை விடுதலை செய்ய கோவை மத்திய சிறைச்சாலை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதையும் படிங்க...மாணவர்களுக்கு தினமும் உடற்கல்வி - பள்ளிக்கல்வித்துறை அறிவுரை