ETV Bharat / state

தெரு விலங்குகளின் பாதுகாப்பிற்கு திட்டம் வகுக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு - தெரு விலங்குகளின் பாதுகாப்பிற்கு திட்டம் வகுக்க வேண்டும்

சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தெரு விலங்குகளுக்கு உணவு கிடைப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டுமென அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு
author img

By

Published : Jun 14, 2021, 3:45 PM IST

கரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவளிக்கக் கோரி சிவா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதிகள் சஞ்ஜீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு இன்று (ஜுன்.14) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆளுநர் 10 லட்ச ரூபாய் நிதி வழங்கியதற்கும், அரசு 9 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் விடுவித்ததற்கும் நீதிபதிகள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

தெரு விலங்குகளின் பாதுகாப்பிற்கும், நாய்களுக்கான கருத்தடை நடைமுறையையும் மனிதாபிமான அடிப்படையில் செய்வதற்கு திட்டம் வகுக்க வேண்டுமென நீதிபதிகள் வலியுறுத்தினர்.

தனியார் மூலம் யானைகள் வளர்ப்பதை முழுமையாக தடை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து எதிர்காலத்தில் நீதிமன்றம் பரிசீலிக்கும் என தெரிவித்த நீதிபதிகள், அதுவரை அவை கண்ணியமாகவும், மனிதாபிமானமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மீண்டும் கரோனா பரவல் அதிகமாகி, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அப்போது தெரு விலங்குகளுக்கு தடையில்லாமல் உணவு கிடைப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டனர்.

ஊரடங்கால் தெரு விலங்குகள் உணவில்லாமல் பாதிக்கப்பட்டதால் தொடரப்பட்ட இந்த வழக்கின் நோக்கம் நிறைவேறியுள்ளதாக தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: நாட்டின் கரோனா இறப்புகள் அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டதைவிட மிக அதிகம் - ஓவைசி எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.