ETV Bharat / state

நீட்: மாணவிகளின் ஆபரணங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

Case filed agaisnt NEET exam rules to remove ornaments
மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு
author img

By

Published : Sep 30, 2020, 11:36 AM IST

Updated : Sep 30, 2020, 3:26 PM IST

11:32 September 30

சென்னை: நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகளிடம் இருந்து (தாலி) தங்க ஆபரணங்களை அகற்றும்படி வற்புறுத்தக் கூடாது என தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் 2017ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்களுக்கான நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 

இந்த தேர்வில் கலந்துகொள்ளும் மாணவிகள் ஆபரணங்கள் அணிய கூடாது எனவும், பர்ஸ் வைத்திருக்க கூடாது, வாட்ச் அணிய கூடாது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டு வருகின்றன.

இந்த கட்டுபாடுகள் காரணமாக, ஆண்டு தோறும் மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த் ராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், நீட் தேர்வில் கலந்துகொள்ளும் திருமணமான விண்ணப்பதாரர்கள் புனிதமாக கருதும் தாலி, மெட்டி மற்றும் காதணி, மூக்குத்தி போன்றவற்றை அகற்றும்படி நிர்பந்திக்கப்படுவதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்வறையில் கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், ஆபரணங்களை அகற்ற வேண்டும் என்ற நிபந்தனை சட்டவிரோதமானது என்பதால், இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் எனவும், ஆபரணங்களை அகற்றும்படி, மாணவிகளை நிர்பந்திக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் படிங்க: நீட் தேர்வு: தாலி, மெட்டியை கழற்றிய மாணவியால் பரபரப்பு

Last Updated : Sep 30, 2020, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.