ETV Bharat / state

ராமனுக்காக தன் மாங்கல்ய பாக்கியத்தை துறக்கத் துணிந்த கைகேயியின் தியாகம்! - ராவணன்

ராம காவியத்தில் கைகேயி மீது படிந்த வடுக்களை போக்குவதற்கும் அவளின் பக்கமுள்ள நியாயத்தை எடுத்துரைப்பதற்கும் அனுமன் வாயிலாக வால்மீகி கதை சொன்ன விதம் நம்மை இப்போதும் சிலிர்க்க வைக்கத்தான் செய்கிறது.

Hanuman standing beside Kaheke in Ramakavyam!
author img

By

Published : May 10, 2019, 9:41 PM IST

Updated : Sep 15, 2019, 11:46 AM IST

ராவணனை வதம் செய்துவிட்டு சீதை, லட்சுமணன், வானர சேனைகளுடன் ராமன் அயோத்தி நோக்கி சென்று கொண்டிருக்கிறார். செல்லும் வழியில் மகாமுனியின் அழைப்பை ஏற்று அவரது ஆசிரமத்தில் இரவு தங்கிய ராமன், விடிந்தால் பதினான்கு ஆண்டுகள் நிறைவடையப்போகிறது என்பதால், சூரியன் எழுவதற்காக காத்திருக்கிறார். ஆனால் ராமனின் ஆழ்மனதில் பரதன், சத்ருகனைப் பற்றிய நினைவு உறுத்திக்கொண்டிருக்கிறது.

பதினான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில் தான் செல்லவில்லை என்றால், அடுத்தநாள் அதிகாலையில் பரதனும், சத்ருகனும் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவர் என்பதே ராமனின் மனக்குமுறலுக்குக் காரணம். இதை தடுத்து நிறுத்துவதற்காகவும் தான் வந்துகொண்டிருக்கும் செய்தியை அங்கு தெரிவிப்பதற்காகவும் ராமன் அனுமனை அனுப்பிவைக்கிறார்.

நந்தி கிராமத்தில், அக்னிப்பிரவேசம் செய்யவிருந்த பரதன், சத்ருக்கனைக் தடுத்து நிறுத்திய அனுமன் பரதனிடம், 'அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்' என்று வேண்டுகிறார். அதற்கு பரதன் 'ராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ' எனக் காட்டுகிறான். கௌசல்யையை வணங்கிய பின், அனுமன் 'அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்' என்ற வினாவை மீண்டும் எழுப்புகிறார். 'ராமனைக் கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலியும் லட்சுமணனையும் என் தம்பி சத்ருக்கனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ' என்று சுமித்ரையை காட்டுகிறான் பரதன்.

இவனிடம் பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்த அனுமன், வெளிப்படையாகவே, 'உன்னைப் பெற்ற தியாகி, அன்னை கைகேயி எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்' என்று கேட்கிறான். அதற்கு பரதன், 'அவள் மகா பாவியாயிற்றே! அவளுக்கு மகனாகப் பிறந்து பாவம் செய்துவிட்டேன் என்று நான் வருந்தாத நாளில்லை. அவளுக்கு ஏன் நீங்கள் வணக்கம் செலுத்த வேண்டும்' என்று அனுமனிடம் கேள்வி எழுப்புகிறான்.

பரதனிடமிருந்து இந்தப் பதிலை சற்றும் எதிர்பாராத அனுமன் மௌனியாக நிற்கிறார். மனதை திடப்படுத்திக்கொண்டு, 'பரதா!' என ஓங்கிக் குரல் எழுப்பிய அனுமன், 'நீயும்! இந்த உலகமும்! தியாகி கைகேயியை பற்றித் தெரிந்தது இவ்வளவுதானா? உனக்குத் தெரியாத அந்தத் தாயின் தியாக உள்ளத்தை எடுத்துரைக்கிறேன் கேள்' என்கிறார்.

அதன்பின் தொடர்ந்த அனுமன், "தசரத மன்னனின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி, கொடிகளிலும் உயிரோட்டத்தையும் உணர்ச்சிகளையும் கண்டவள். சிறுவயதில் தசரத மன்னன் ஒருமுறை விளையாடிக்கொண்டிருந்தபோது, தளதளவெனப் பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்துவிடுகிறான். ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிப்போன இந்துமதி மகனென்றும் பாராது, 'தன் குழந்தையான தளிரைப் பிரிந்து இந்தக் கொடி எப்படி கண்ணீர் வடிக்கிறதோ, அப்படியே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய்' என சபித்துவிடுகிறாள்.

பின்னர் தசரத மன்னன் இளமைப் பருவத்தில், காட்டிற்கு வேட்டைக்குச் சென்றபோது, ரிஷிகுமாரனான சிரவணனை தவறாக அம்பெய்தி கொன்றுவிட்டு, பார்வையற்ற அவனின் பெற்றோரிடமிருந்து, 'உயிர் நீங்கும் முன்பு புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய்' என்று சாபம் பெறுகிறார். தசரத மன்னனின் இந்த இரண்டு சாபங்களைப் பற்றி கைகேயி நன்கு அறிந்திருந்தாள்.

தசரத மன்னன் ராமனுக்கு பட்டாபிஷேகம் நடத்த முடிவெடுத்த தருணத்தில், கைகேயி அதை தடுக்காமல் இருந்திருந்தால், அரசனாக அமரப்போகும் ராமன் இறக்க நேர்ந்திருக்கும். பின்னர் புத்திர சோகத்தால் தசரத மன்னனும் மரணிக்க நேர்ந்திருக்கும். புத்திரசோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்பது விதி. ஆனால் அது ராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்ற கேள்வி அவள் முன்வைக்கப்பட்டபோது, இந்த உலகம் தன்னை பழித்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்து, ராமனைக் காப்பாற்ற முற்பட்டாள் கைகேயி.

ராமன் வனவாசம் சென்றால் புத்திர பிரிவால் தசரதர் இறப்பார் என்று தெரிந்தும், மகனின் உயிரைக் காக்க அவளது சுமங்கல்யத்தைக் பணயம் வைக்கத் துணிந்தாள். ராமனைக் காக்க உன்னையும் இழக்கத் தயாராக இருந்தாள் உன் தாய். அவள் மகா தியாகி! அவளால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் ராமனின் அருள் கிடைத்தது. கர-தூஷணர் முதல் ராவணன்வரை பல கொடியவர்கள் வதம் செய்யப்பட்டனர். அந்தப் புனிதத்தாயை அனைவரும் வணங்க வேண்டும்" என்று எடுத்துரைத்தார்.

இறுதியாக பரதனின் கண்கள் ஓரம் கண்ணீர் வடிந்தது!

ராம காவியத்தில் 'கைகேயி' கதாபாத்திரம்... நாம் அறிந்திடாத உண்மை!

Intro:Body:Conclusion:
Last Updated : Sep 15, 2019, 11:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.