ETV Bharat / state

எம்.எல்.ஏ பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் வசந்த்குமார்! - காங்கிரஸ்

சென்னை: நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ஹெச்.வசந்த்குமார் நாளை ராஜினாமா செய்ய இருக்கிறார்.

vasanth kumar
author img

By

Published : May 26, 2019, 5:54 PM IST

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டின் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக ஹெச்.வசந்த்குமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டவிதி 101 (2) ன் படி ஒருவர், இரு வேறு பதவிகளை வகிக்க முடியாது என்பதால், தனது நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை நாளை தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து ராஜினாமா செய்ய உள்ளார்.

வசந்தகுமார் நாளை ராஜினாமா

நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வெற்றி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஒருவர் இரு வேறு பதவிகளை வகிக்க முடியாது. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வசந்தகுமார் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வென்று நாடாளுமன்ற உறுப்பினராகி உள்ளார். ஆனால் இந்திய அரசியலமைப்புச்சட்ட விதி 101 (2) ன் படி ஒருவர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினராக ஒருவர் தொடரக்கூடாது. குறிப்பிட்ட நாளுக்குள் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாவிடில் அவரது நாடாளுமன்ற பதவி காலியாக அறிவிக்கப்பட்டுவிடும். இதனால் நாளை வசந்தகுமார் தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை அணுகி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அவரது காரணங்கள் ஏற்புடையதாக இருப்பின் சபாநாயகர் ராஜினாமாவை ஏற்று கொள்வார். 

--
V.T. VIJAY,
Reporter/ Content Editor,
E TV bharat,
chennai.
+91 9629185442

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.