ETV Bharat / state

தமிழிசை சௌந்தரராஜன் தாய் கிருஷ்ணகுமாரி காலமானார்! - உள்ளூர் செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயாருமான கிருஷ்ணகுமாரி, உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.

தனது தாய் கிருஷ்ணகுமாரி உடன் தமிழிசை சௌந்தரராஜன்

author img

By

Published : Aug 18, 2021, 9:33 AM IST

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயாருமான கிருஷ்ணகுமாரி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76.

தெலங்கானாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (ஆக.18) அதிகாலை கிருஷ்ணகுமாரி காலமான நிலையில், சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜனின் இல்லத்திற்கு அவரது உடல் இன்று மாலை எடுத்துவரப்பட்டு, நாளை (ஆக.19) நல்லடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தாய் கிருஷ்ணகுமாரி உடன் தமிழிசை சௌந்தரராஜன்
தனது தாய் கிருஷ்ணகுமாரி உடன் தமிழிசை சௌந்தரராஜன்

முன்னதாக தனது தாயார் கிருஷ்ணகுமாரி மறைவு குறித்து ட்வீட் செய்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், ”என்னை பார்த்துப் பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்

“வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார்” என்று சொல்லி நல்லொழுக்கத்துடன் வாழ கற்றுக்கொடுத்தவர் எனது தாயார்.

என் தாயாரின் இறுதி ஆசைப்படி சாலிகிராமத்தில் உள்ள எனது இல்லத்தில் இன்று மாலை நான்கு மணியளவில் இறுதி அஞ்சலிக்காக என் தாயாரின் உடல் வைக்கப்பட்டு நாளை உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை கண்ணீருடன் பகிர்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு குறித்த அமைச்சரவைக் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.