சென்னை விருகம்பாக்கம் காவல் துறையினர், சாலிகிராமத்தில் உள்ள ஏ.வி.எம். தெருவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த டாடா ஏஸி, கார் ஆகிய இரண்டு வாகனங்களை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர். பின்பு, வாகனத்தை சோதனை செய்த காவல் துறையினர், அதில் தடைசெய்யப்பட்ட 300 கிலோ குட்கா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
![குட்கா கொண்டுவந்த வாகனங்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5145303_car.jpg)
பின்பு, தடை செய்யப்பட்ட குட்காவை கொண்டுவந்த தி.நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி, செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட குட்காவானது மதுரவாயலில் உள்ள குடோனிலிருந்து கொண்டு வந்தது தெரியவந்தது.
![குட்கா பதுக்கி வைத்திருந்த நபர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5145303_img.jpg)
இதுகுறித்து விருகம்பாக்கம் காவல் துறையினர் கொடுத்த தகவலின்படி கோயம்பேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று குடோனில் பதுக்கி வைத்திருந்த ஐம்பது லட்சம் ரூபாய் மத்திப்பிலான 3.5 டன் குட்காவை பறிமுதல் செய்ததோடு குடோன் உரிமையாளர் மகேஸையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஒரு டன் கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல்!