சென்னை: திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் உருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், வி.ஜி.பி.சந்தோஷம், சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், "சாதி, மதம், இனம், மொழி அனைத்தையும் கடந்திருப்பது திருக்குறள். யாகாவாராயினும் நா காக்க என்பது அரசியலில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனது மனதில் சாணக்கியன், கிங் மேக்கர் என்று நினைத்து கொண்டிருக்கிறார். 2021ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுகவை கொண்டு வர மக்கள் தயாராகிவிட்டனர். இல்லாதவற்றை இருப்பது போன்று மாயையை வேண்டுமென்றே ஏற்படுத்து அறிவற்ற தன்மை. குருமூர்த்தி யாருக்காக வக்காலத்து வாங்குகிறார். அவர், டிடிவி தினகரனிடம் காசு வாங்கிக்கொண்டு பேசி வருகிறார். அவர் நாரதர் வேலை பார்க்க ஆரம்பித்துள்ளார்.
ஜல்லிக்கட்டை ஒழித்ததே காங்கிரஸ் - திமுக கூட்டணிதான். தேர்தல் சமயம் என்பதால் ஓட்டு பிச்சை கேட்டும், செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடியும் ராகுல் காந்தி மதுரை வந்திருக்கிறார்" என்றார்.
இதையும் படிங்க: 'திமுகவை வீழ்த்த சசிகலாவுடன் அதிமுக இணையலாம்' - குருமூர்த்தி சூசகம்