ETV Bharat / state

தமிழ் பாரம்பரிய தப்பாட்டம் கற்க ஆசையாக உள்ளது - ஜெயராம் - கின்னஸ் விருது பெற்ற சென்டை

பல இசைக் கருவிகளை நான் வாசித்தாலும் தமிழ் பாரம்பரிய தப்பாட்டம் கற்க ஆசையாக உள்ளது என நடிகர் ஜெயராம் கூறியுள்ளார்.

author img

By

Published : Jan 12, 2020, 8:03 PM IST

2019 அக்டோபர் 8ஆம் தேதி மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன், குருவாயூரப்பன் கோயில் ஸ்ரீ ஐயப்ப பக்த சபா சார்பில், 150 மாணவர்களுடன், கேரளாவில் இருந்து வந்திருந்த 200 செண்டை மேள கலைஞர்களும் நின்று 40 நிமிடம் செண்டை மேளம் வாசித்து அரங்கேற்றம் செய்தனர்.

இந்த கின்னஸ் முயற்சி வெற்றி பெற்றதாக உலக கின்னஸ் நிறுவனம் அறிவித்து சான்றிதழ் வழங்கியது. இதனையடுத்து, இன்று சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் கின்னஸ் சாதனை நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜெயராம் கலந்துகொண்டு செண்டை மேள கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும் உலக கின்னஸ் சாதனை விருது மகாலிங்கபுரம் கோயிலுக்கு சமர்பிக்கப்பட்டது.

இதன் பின் ஜெயராம் பேசுகையில், மிகப் பெரிய முயற்சியில் ஈடுபட்ட அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள். நானும் சிறு வயதிலேயே நடிப்பு, செண்டை மேளம் கற்றுக்கொண்டேன். பல இசை கருவிகளை நான் வாசித்தாலும் தமிழ் பாரம்பரிய தப்பாட்டம் கற்க ஆசை உள்ளது.

40 ஆண்டுகளுக்கு முன் செண்ட மேளம் மீதான ஆர்வம் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலை மாறி நாடு கடந்து மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

Intro:Body:visuals (Old)

New Via 3g kitConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.