ETV Bharat / state

பள்ளிகள் திறப்பு: 50 விழுக்காடு மாணவர்களுடன் இயங்கலாம் - பள்ளிகள் திறப்பு

பள்ளிகள் திறக்கப்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

guidelines Protocol  guidelines Protocol for schools reopening  schools reopening  schools reopen  guidelines  Protocol  schools reopening guidelines  Department of Medicine and Public Welfare  chennai news  chennai latest news  வழிகாட்டு நெறிமுறை  வழிகாட்டு நெறிமுறை வெளியீடு  பள்ளிகள் திறக்கப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  சென்னை செய்திகள்  பள்ளிகள் திறப்பு  பள்ளிக்கல்வித் துறை
வழிகாட்டு நெறிமுறை
author img

By

Published : Aug 18, 2021, 4:18 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை, தற்போது குறைந்து வரும் நிலையில், வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9,10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:-

  • பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்களும், பள்ளியின் ஒருங்கிணைப்பாளரும் இணைந்து மேற்பார்வை செய்ய வேண்டும்.
  • 50 விழுக்காடு மாணவர்களுடன் செயல்பட வேண்டும்.
  • பள்ளி நிர்வாகம் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.
  • மாணவர்கள் கைகழுவும் வசதி, உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்படும் கருவி ஆகியவை பள்ளிகளில் இடம்பெற வேண்டும்.
  • வாரத்திற்கு ஒரு முறை பள்ளிக்குழந்தைகள், ஆசிரியர்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கிறதா, என்பதை பரிசோதனை செய்ய வேண்டும்.
  • நடமாடும் மருத்துவப் பரிசோதனைக் குழுவின் தொடர்பு எண்களை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள் வெளியிட வேண்டும்.
  • கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரியும் ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளி வளாகத்திற்குள் சேர்க்கக்கூடாது.
  • பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான அளவிற்கு வைட்டமின் சி, மல்டி வைட்டமின் உள்ளிட்ட நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • ஆசிரியர்கள் அனைவரும் 100 விழுக்காடு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
  • தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
  • ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • கரோனா பரவலைத் தடுக்க மாணவர்களை 6 அடி இடைவெளியில் அமரவைக்க வேண்டும்.
  • முதல் நாளில் 50 விழுக்காடு மாணவர்களும், மறுநாளில் எஞ்சிய 50 விழுக்காடு மாணவர்களும் மாறி, மாறி பள்ளிக்கு வரவேண்டும்.
  • பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருப்பதை பள்ளி நிர்வாகமும், உள்ளாட்சி நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.
  • பள்ளிகளில் உள்ள மேஜைகள், கேண்டீன்கள், கழிவறைகள், நூலகங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.
  • பள்ளி வாகனங்களைவிட்டு கிளம்புவதற்கு முன், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.
  • பள்ளிகளில் விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் தொடர்ந்து பள்ளிகளில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்தும், 50 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் ஆகும்.

இதையும் படிங்க: நடப்புக் கூட்டத் தொடரிலேயே 'நீட்'டுக்கு எதிரான சட்ட முன்வடிவு - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.