இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கை எண்: 1/2019-ல், குருப்-1 ல் அடங்கிய பதவிகளுக்கான அறிவிக்கையினை வெளியிட்டிருந்தது. அதற்கான முதல் நிலைத் தேர்வு 2019 மார்ச் 3-ம் தேதி அன்று நடைபெறுகிறது, முதன்மை எழுத்துத் தேர்வு 2019 மே மாதம் கடைசி வாரத்தில் நடைபெறும். மேலும் இந்த தேர்வின் முதன்மை எழுத்து தேர்விற்கான பாடத்திட்டம் பின்னர் அறிவிக்கப்படும்.
அதன்படி குரூப்-1 தேர்வின் முதன்மை எழுத்து தேர்விற்கான திட்டம் மற்றும் பாடத்திட்டங்கள் (Scheme and Syllabus) ஆகியவற்றை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in –இல் வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்விற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் மாற்றப்பட்டுள்ளதால் தேர்வுக்காக தயாராகும் விண்ணப்பதாரர்களுக்கு போதிய கால அவகாசம் தரப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு முதன்மை எழுத்துத் தேர்வு 2019 ஜுலை இரண்டாம் வாரத்தில் நடத்தலாம் என உத்தேசித்துள்ளது.
எனவே விண்ணப்பதாரர்கள் இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி புதிய தேர்வுத்திட்டம் மற்றும் பாட திட்டத்திற்கு தயாராக வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.