ETV Bharat / state

நண்பரைத் தாக்கியவர்களைத் தட்டிக் கேட்டவர் அடித்துக் கொலை! - சென்னை செய்திகள்

மணலி புதுநகரில் நண்பரைத் தாக்கியபோது, அதைத் தடுத்த வாலிபரை அடித்து கொலை செய்தாக 8 பேரை காவல்துறை கைது செய்துள்ளனர்.

crime
crime
author img

By

Published : Jan 6, 2022, 9:28 AM IST

சென்னை: திருவொற்றியூர் தாங்கல் தெருவைச் சேர்ந்தவர் ஹரிதாஸ்(24). இவர் பாரிமுனையிலுள்ள நாட்டு மருந்துக் கடையில் பணிபுரிந்து வந்தார். இவருடைய நண்பர் சக்திவேல்(44). இவர் லாரி ஓட்டுநர் ஆவார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹரிதாஸ் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் மணலி புதுநகர் அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, அங்கே வந்த ஒரு கும்பல் சக்திவேலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். உடனே அருகிலிருந்த ஹரிதாஸ் தட்டி கேட்டுள்ளார்.

இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுக் கைகலப்பாகியது. மேலும், இருவரையும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த மோதலில் சக்திவேல் ஹரிதாஸ் இருவருக்கும் தலை உடல் போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்

உடனடியாக அருகிலிருந்தவர்கள் படுகாயமடைந்த இருவரையும், ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காகச் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நண்பருக்காக சண்டையிட்டு உயிரிழந்த சோகம்
நண்பருக்காக சண்டையிட்டு உயிரிழந்த சோகம்

மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு மணலி புதுநகர் காவல்துறை ஆய்வாளர் கொடி தலைமையிலான காவல்துறையினர், இது சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததில் ஹரிதாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறை நடவடிக்கை

மேலும் சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்த காவல்துறை இருவரையும் தாக்கிய தினேஷ் (26), ஆசைமணி (26), பிரவீன் (25), அன்பரசன் (25), முருகவேல் (22), மாதவன் (25), மருதமுத்து (29), விக்னேஷ் (28) ஆகிய 8 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: "கல்லூரிகளில் நேரடித் தேர்வு முறையே தொடர வாய்ப்பு!" - அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.