ETV Bharat / state

குரூப் 2ஏ முறைகேடு: டிஎன்பிஎஸ்சி அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்

author img

By

Published : Feb 8, 2020, 7:16 PM IST

சென்னை: குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலயே பணி செய்துவந்த பெண் ஊழியர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

suspended
suspended

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட பலர் சிபிசிஐடியினரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலேயே உதவியாளராக பணிபுரிந்துவந்த கல்பனா என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், கல்பனா சென்னை முகப்பேரில், முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் வீட்டுக்கு அருகே வசித்து வந்துள்ளதும் தனது கணவர் மூலம், பணம் கொடுத்து பணிக்கு அமர்ந்திருப்பதும் தெரியவந்தது.

மேலும் இதேபோல் பலர் பணியில் அமர்த்தப்பட்டிருக்கலாம் எனும் கோணத்தில் விசாரணை தொடர்ந்துவருகிறது. ஆனால் கல்பனா இன்னும் கைது செய்யவில்லை என்பதும் அவர் தேர்வாணையம் அளித்த 42 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குரூப்-2ஏ முறைகேடு வழக்கில் மேலும் மூவர் கைது

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 08.02.20

குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடு செய்து
டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலயே பணி
பெண் ஊழியர் கல்பனா பணி நீக்கம்...

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட பலர் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக
குரூப் 2 ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு, சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திலேயே வேலை செய்துவந்த உவியாளர் கல்பனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
குரூப் 2 ஏ தேர்வில், 42 பேர் முறைகேடு செய்து, அரசு வேலையில் சேர்ந்ததாக, சிபிசிஐடியில் தேர்வாணையம் புகார் அளித்திருக்கிறது. இவர்களை கைது செய்யும் பணி தொடர்ந்து நடக்கிறது.
இதற்கிடையே, 42 பேர் பட்டியலில் இடம்பெற்று, தேர்வாணைய அலுவலகத்திலயே வேலை பார்த்துவந்த உதவியாளர் கல்பனா என்பவரை பணியிடை நீக்கம் செய்து, தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.
விண்ணப்பங்களை பராமரிக்கும் பிரிவில் உதவியாளராக வேலை பார்த்து வந்த கல்பனா, சென்னை, முகப்பேரில் வசித்து வருகிறார்.

அதாவது, முறைகேட்டின் முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் வீட்டுக்கு அருகே வசித்து வந்துள்ளார்.
தனது கணவர் மூலம், பணம் கொடுத்து வேலைக்கு வந்ததும், தேர்வாணைய அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. முறைகேடாக வேலையில் சேர்ந்து, தங்கள் அலுவலகத்திலேயே கல்பனா வேலை பார்த்து வந்ததை அறிந்து, அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் இதனை தொடர்ந்து கல்பனா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பலர் இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை தொடர்கிறது. இவரை இன்னும் போலீசார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது...

tn_che_05_tnpsc_employee_suspended_script_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.