சென்னை: கடந்த 2015 ஆம் ஆண்டு ஐநா சபை வறுமை ஒழிப்பு, பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, ஆரோக்கியமான வாழ்வு போன்ற 17 நிலையான வளர்ச்சி இலக்குகளை உருவாக்கியது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், காந்தி பிறந்த நாளை முன்னிட்டும் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவர் சர்வேஷ், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கி தனது தொடர் ஓட்டத்தை தொடங்கினார்.
14 நாட்களில் 750 கிலோமீட்டர்
இன்று சென்னை வல்லுவர் கோட்டத்தில், தனது தொடர் ஓட்டத்தை சிறுவன் நிறைவு செய்துள்ளார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர் சர்வேஷ்க்கு து பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்ததுடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கினார்.
இரண்டு லட்சம் விதைகள்
இந்த சாதனை ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள நிலையில், விரைவில் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும், குறிப்பாக வரும் வழி நெடுகிலும் இந்த சிறுவன் 2 லட்சம் விதைகளை தூவி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: VIRAL: பூனை என நினைத்து புலியைப் பிடித்த பிரபலம்!