ETV Bharat / state

'கருணாநிதியின் கையெழுத்தை திமுக ஆட்சியில் நிறைவேற்றுக' - பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு

author img

By

Published : Jan 19, 2023, 10:06 PM IST

தமிழ்நாட்டில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்கள் உட்பட 3,743 ஆசிரியர்களை பணியமர்த்தக் கோரியும், இதற்காக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையெழுத்தை திமுக ஆட்சியில் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
'கருணாநிதியின் கையெழுத்தை திமுக ஆட்சியில் நிறைவேற்றுக' - பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கையெழுத்தை திமுக ஆட்சியில் நிறைவேற்ற வேண்டும் என இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் 100-க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, பணிக்காக காத்திருக்கும் பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இன்று (ஜன.19) முற்றுகைப் போராட்டம் மற்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ரத்தினகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பதிவு மூப்பு அடிப்படையில் கடந்த 2010ஆம் ஆண்டு, சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த தங்களுக்கு அரசு பள்ளிகளில் தற்போது உள்ள காலிப் பணியிடங்களில் தங்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும், தற்போது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையானது, பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் நிரப்பும் 14ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் தங்களை நியமித்துள்ளது.

கடந்த 2006-2011ஆம் ஆண்டு கடந்த திமுக ஆட்சியில் பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 3 கட்டங்களாக நியமிக்கப்பட்டனர். அடுத்தகட்டத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு பணி நியமனத்திற்காக காத்திருந்த சுமார் 3 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஆட்சி மாற்றத்தின் காரணமாக நியமிக்கப்படவில்லை.

எனவே, சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்ட 1743 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சுமார் 2000 பட்டதாரி ஆசிரியர்களை தற்போதுள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களில் நியமிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகள் பழி வாங்கப்பட்டோம்.
தேசிய ஆசிரியர் கல்வியியல் கழகத்தின் விதிப்படி 2013 ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் தேதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையின் படி திமுக ஆட்சியில் வேலை வழங்க வேண்டும்' என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சம வேலைக்கு சம ஊதியம்; 'கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.