ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் ஆக.16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - அரசு ஊழியர் சங்கம்

author img

By

Published : Aug 13, 2021, 10:42 PM IST

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட முக்கிய அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கை தாக்கலில் வெளியிடாதது, அகவிலைப்படியை 27 மாதங்கள் கழித்து வழங்குதல் உள்ளிட்டவற்றை கண்டித்து, வருகின்ற ஆக.16ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, திமுக வெற்றி பெற்றது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, இன்று (ஆக.13) தனது முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான நிதியமைச்சரின் அறிவிப்புகள் பெரும் ஏமாற்றத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளன.

இடம்பெறாத தேர்தல் வாக்குறுதிகள்

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு, பொதுச் செயலாளர் செல்வம் ஆகியோர் இன்று (ஆக.13) செய்தியாளர்களைச் சந்தித்தனர், அப்போது அவர்கள் பேசுகையில், “தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பல்வேறு மக்கள் சார்ந்த திட்டங்களை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதி, ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டது, அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்பட்டது ஆகியவை வரவேற்கத்தக்கது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் குறித்து, இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு ஏதும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல், சத்துணவு, அங்கன்வாடி, வருவாய். கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகங்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறாதது ஏமாற்றமளிக்கிறது.

ஆயிரம் இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

மேலும் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்தல், கரோனாவை காரணம் காட்டி இருபத்தி ஆறு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை அளித்தல் ஆகியவையும் இடம் பெறவில்லை. அரசுத் துறையில் காலியாக உள்ள 4 லட்சத்து 50 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படுவது குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படாதது, தமிழ்நாடு அரசின் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே முதலமைச்சர் நிறைவேற்றிட வேண்டும். முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருகின்ற ஆக.16 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில், அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

திமுக ஆட்சி அமைந்தால் அரசு ஊழியர்களுக்கு விடியல் வரும் என எதிர்பார்த்து, விரும்பி ஆட்சியைக் கொண்டு வந்தோம். ஆனால், எங்களுக்கு ஏமாற்றமாக உள்ளது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், துறைவாரி சங்கங்களை இணைத்து மாநில செயற்குழு கூடி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிப்போம்” என்றனர்.

இதையும் படிங்க: கிராமப்புறங்களில் வீடு வழங்கும் திட்டத்துக்கு ரூ.3,548 கோடி ஒதுக்கீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.