ETV Bharat / state

ஊரடங்கு அமல் - விளைப்பொருள்களை நேரடியாகக் கொள்முதல் செய்ய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்! - குடும்ப அட்டைதாரர்களுக்கு உதவித்தொகை

சென்னை: ஊரடங்கு அமலில் இருப்பதால், தமிழ்நாட்டிலுள்ள விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க விளைப்பொருள்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

hc
hc
author img

By

Published : Apr 9, 2020, 5:35 PM IST

கரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்க, ஊரடங்கு உத்தரவைத் தமிழ்நாடு அரசு அமல்படுத்தியுள்ளது. இந்த உத்தரவால், தமிழ்நாடு அரசு, ஆயிரம் ரூபாய் நிதியும், ரேஷன் பொருள்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, இதனை வழங்கக்கோரி வழக்குரைஞர் ராஜேஷ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சமூக விலகலை முறையாக கடைப்பிடித்து, 96 விழுக்காடு பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தற்போது வரை கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறையாததால் மே மாதம் ரேஷன் பொருள்கள் வழங்கும் போதும், கடைகளில் மக்கள் கூட்டம் சேராமல் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதையும் படிங்க: மருத்துவத் துறைக்கு உரிய ஊக்குவிப்பு இல்லை - நீதிபதிகள் வேதனை

பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ஊரடங்கால் நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்குவது போன்ற திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்தார்.
மேலும், பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில், இடைத்தரகர்களுக்கு இடம் தராமல் விளை பொருள்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: மலேசியாவில் சிக்கியுள்ள 350 இந்தியர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.