ETV Bharat / state

ஸ்ரீ சீதாராம் பள்ளியை ஏற்று நடத்துவது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னையில் அனுமதியின்றி செயல்பட்டுவரும் ஸ்ரீ சீதாராம் மேல்நிலைப்பள்ளியை அரசு ஏற்று நடத்த சம்பந்தபட்ட அதிகாரிகள் பரீசீலனை செய்து முடிவெடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author img

By

Published : Feb 21, 2023, 6:53 PM IST

ஸ்ரீ சீதாராம் பள்ளியை கையகப்படுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் பரிசீலிக்கலாம்- சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ ராம் சாமாஜ் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 1987ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இப்பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், அரசு வழங்கிய அங்கீகாரம் கடந்த 2012 ஆண்டு மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளியின் மூன்று மாடி கட்டிடமும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாகவும், தீயணைப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் தடையில்லா சான்று பெறாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகள் கல்வி கட்டண குழு நிர்ணயித்த கட்டணத்தை விட கடந்த 2010 ஆம் முதல் 2013ஆம் ஆண்டு வரை ரூ.1 கோடியே 68 லட்சம் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது. இது முற்றிலும் விதிகளுக்கு முரணாக இயங்கி வரும் ஸ்ரீ சீதாராம் பள்ளியின் தற்போதைய கட்டிடமும் மிக மோசமான நிலையில் உள்ளதால், பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் கூறியுள்ள மனுதாரர். அடுத்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், பள்ளி கட்டிடம் பாழடைந்து அங்கு படிக்க வரும் மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டால், பள்ளியை கையகப்படுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் பரிசீலித்து முடிவெடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளார். மனுதாரர் மற்றும் சமாஜ உறுப்பினர்களுக்கு இடையே உள்ள பிரச்சினையை ஊக்குவிக்கவோ?. அனுமதிக்கவோ? முடியாது என்றும் தெரிவித்துள்ள நீதிபதி, மனுதாரர் பிரச்சினைகளை உருவாக்க விரும்பினால் இரு தரப்பும் பள்ளியை இழக்க நேரிடும் எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.

மனுதாரர் மற்ற உறுப்பினர்களும் சேர்ந்து, கட்டிடத்தில் நிலையானதாக இல்லாத பகுதிகளை மீண்டும் கட்டலாம் அல்லது புதுப்பிக்கலாம் அல்லது சீர் செய்யலாம் என்றும் ஆலோசனை வழங்கியதுடன், வழக்கின் விசாரணையை மார்ச் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:ஈரோடு கிழக்கு தேர்தலை நிறுத்தக்கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.