தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் தற்போது மத சிறுபான்மையினருக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வருவதை திருத்தி அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், “தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் தற்போது மத சிறுபான்மையினருக்கு மட்டுமே பிரதிநிதித்துவம் உள்ளது, மொழிவழி சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை. எனவே, மாநில சிறுபான்மையினர் ஆணையத்தில் மொழிவழி சிறுபான்மையினருக்கு சிறந்த பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநில சிறுபான்மை ஆணையத்தில் மொழி சிறுபான்மையினரும் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஆணையத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9-ல் இருந்து 13 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 9 பேர் மத சிறுபான்மையினராகவும், 4 பேர் மொழி சிறுபான்மையினராகவும் இடம் பெற்றுள்ளனர்.
![மொழிவழி சிறுபான்மையினர் மாநில சிறுபான்மை ஆணையம் திருத்தி அமைப்பு மொழி சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் state minority state minority corrected chennai news chennai latest news priority for language minority Govt amends State Minority Authority State Minority Authority](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13543167_che.png)
மேலும், மதம் மற்றும் மொழி பிரிவை சேர்ந்த தலா ஒருவர் ஆணையத்தின் துணைத்தலைவராக இருப்பார்.மொழி சிறுபான்மையினருக்கும் பிரதிநிதித்துவம் அளித்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதேபோல தெலுங்கு, மராத்தி, உருது, கன்னடம், மலையாளம், சௌராஷ்டிரா பிரிவை சேர்ந்த 4 பேர், தாய் மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் மொழியியல் சிறுபான்மையினராக குழுவில் இடம் பெறுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.