ETV Bharat / state

ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது - திருமாவளவன் - ஆளுநரின் செயல்பாடு குறித்து திருமாவளவன்

ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக உள்ளது - திருமாவளவன்

author img

By

Published : Jan 10, 2023, 4:01 PM IST

ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது - திருமாவளவன்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "பொங்கல் வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்தோம். நேற்று சட்டப் பேரவையில் ஆளுநரின் சட்டவிரோதச் செயலுக்கு எதிர்வினை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல் போற்றுதலுக்குரியது.

ஆளுநரின் செயல்பாடு என்பது மாநில அரசுக்கும், இன்றைய அரசுக்கும் உள்ள முரண்பாடு. ஆளுநர் உணர்ச்சிவசப்பட்டு இதை செய்யவில்லை. திட்டமிட்டு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென செய்துள்ளார். ஆளுநர் ஒப்புதலோடு அச்சிடப்பட்ட உரையை சில வார்த்தைகளை தவிர்த்து இருப்பது என்பது சங் பரிவார் செயல்பாடுகளில் ஏற்கனவே உள்ளது என்பதை உணர்த்துகிறது. ஏற்கனவே ஆளுநர் ரவி, ஒரு மாநிலத்தில் ஆளுநராகவும், பாதுகாப்புத் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அவரது அனைத்து செயல்பாடுகளும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது.

முதலமைச்சர் சட்டப்பேரவையில் செயல்பட்ட விதம் அவரது ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சரின் இந்த செயல்பாடுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக ஆளுநரை கண்டித்து வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் அனைத்து ஜனநாயக கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழகம் என்று ஆளுநர் கூறுவது மாநில அரசை கோபப்படுத்துவதற்கான செயலாகும். தமிழ்நாடு என்று கூறுவதைப் புறக்கணிப்பது, திராவிட அரசுக்கு எதிராக செயல்படுவது, தமிழ்நாடு இலச்சினைகளைப் புறக்கணித்தார் என்றால் அவர் ஆளுநராக இருப்பதற்குத் தகுதி இல்லாதவர்.

ஆளுநருக்கு எதிராக ஒரு இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன். இதற்காக இதர இடதுசாரிகள் இணைய வேண்டும். புதுக்கோட்டையில் நீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தை முதலமைச்சரிடம் பேசியுள்ளோம். இதில் 20 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

இதையும் படிங்க: தேர்தல் ஆணைய கூட்டத்தில் அதிமுக சார்பில் யார் பங்கேற்பது? - ஓபிஎஸ் பதில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.