ETV Bharat / state

'ஆளுநர் 356ஆவது பிரிவை பயன்படுத்தி திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும்' - ஜெயக்குமார் - திமுக ஆட்சியை ஆளுநர் கலைக்க வேண்டும்

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ள நிலையில் இது குறித்து கருத்துகளை தெரிவிக்காமல் ஆளுநர் 356ஆவது பிரிவைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 5, 2023, 10:46 PM IST

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. தமிழ்நாட்டில் குறிப்பாக கஞ்சா, பிரவுன் சுகர் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்களை சர்வ சாதாரணமாக உலா வருகிறது. போதையை அழித்துவிட்டு சட்ட விரோதமான செயல்களை செய்து வருகின்ற விடியாத அரசாங்க இருக்கிறது.

போதையில் வியாபாரிகளை தாக்கும் நிகழ்வு தான் ஆங்காங்கு நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில் போதையால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. இதனால், வணிகர்கள் முதல் தாக்குதலுக்கு ஆள் ஆகி இந்த விடியாத ஆட்சியில் ஏற்பட்டிருக்கிறது. போதை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும், சட்டம் ஒழுங்கு சீராக ஆக்கப்பட வேண்டும், அது இந்த ஆட்சியில் நடக்கப் போவதில்லை.

ஸ்டாலின் நிர்வாகம் செய்யத்திறன் அற்றவர். நிர்வாகம் செய்ய இயலாதவர். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு முதலமைச்சராக இருக்கிறார். இந்த ஆட்சியில் கொலை, கொள்ளை, வன்புணர்வு போன்ற குற்றங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதைக் கட்டுப்படுத்தவும் இந்த அரசாங்கம் முன்வராமல் இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக அனைத்து அமைச்சர்கள் மாற்றப்பட வேண்டும். முதலமைச்சரும் ராஜினாமா செய்து விட்டு செல்ல வேண்டும், விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றாத சூழ்நிலை, மின்சாரம் வரி, வீட்டு வரி, பால் வரி உயர்வு; எல்லா உயிர்களுக்கும் மக்கள் கஷ்டப்படும் சூழ்நிலையில், இந்த அரசு வீட்டிற்குச் சென்றால் நல்லது என்று தான் தமிழ்நாடு மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

திராவிட மாடல் என்று கூறி, திமுக திராவக மாடலை கொண்ட ஆட்சியை தான் செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் எல்லோரும் சமம் என்று அடிப்படையில் மக்கள் நடத்தப்பட்டார்கள். ஆனால், இந்த திராவிட மாடல் ஆட்சியில் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வேங்கை வயலில் நடந்த ஆதிதிராவிடர் குடியிருப்பில் மலம் கழித்து குற்றம்செய்தவர்களை இன்னும் பிடிக்காமல் கண்டுபிடிக்காமல் இருக்கிறார்கள்.

விஞ்ஞான வளர்ச்சியடைந்த காலத்திலும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இருக்கிறது, திமுக அரசு இதேபோல் பல ஆதி திராவிட மக்கள் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதேபோன்று சமத்துவம் இல்லாத இவர்களுக்கு திராவிட மாடல் எனக் கூறிகொள்ள தகுதி கிடையாது, எனவே இது ஒரு திராவக மாடல்.

மாசோதாவை பொறுத்தவரை நல்ல விஷயங்களுக்கு நீட் போன்ற தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத விஷயங்களை ஆளுநர் கருத்தை ஒப்பிட்டு இருக்க வேண்டும். அதேபோன்று கூட்டுறவு சங்க பதவிக்காலத்தை ஐந்து வருடங்களில் இருந்து மூன்று வருடங்களாக குறைக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். எதிர்க்கட்சியை பழிவாங்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னோக்கத்தில் உள்ள மசோதாக்களை கண்டிப்பாக ஆளுநர் நிறைவேற்றுவாரா என்பதை யோசிக்க வேண்டும். ஆனால் நல்ல விஷயங்களுக்காக கொண்டுவந்த மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்ற வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநர் என்பவர் இந்த தமிழ்நாட்டின் முதல் குடிமகன். அவர் இந்த தமிழ்நாட்டின் மீது மிக பகிரங்க குற்றச்சாட்டை வைக்கிறார். சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமாக இருக்கிறது என்று ஆளுநரை கூறும் பொழுது முக்கியமான ஆதாரங்களை வெளியே கூறுகிறார் ஆளுநர், பாகிஸ்தானில் இருந்து சர்வசாதாரணமாக ஆயுதங்களும் போதைப் பொருட்களும் தமிழ்நாட்டுக்குள் சர்வசாதாரணமாக வருகிறது என்றால் இதை சுலபமாக விட முடியுமா?

தீவிரவாதத்தை செயல்படுத்துகின்ற ஒரு குற்றச்சாட்டை ஆளுநர் வைக்கும்பொழுது இதை சொல்வதோடு ஆளுநர் நிறுத்தாமல் மத்திய அரசின் 356பிரிவின்கீழ் இந்த ஆட்சியை கலைப்பதற்கு ஆளுநர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதை ஆளுநர் பரிந்துரை செய்தால் மட்டுமே உண்மையிலேயே ஆளுநர் தன்னுடைய வேலையை செய்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்கள் ஆட்சியில் கல்வியில் முன்னோடி உள்ள மாநிலமாக தான் வைத்திருந்தோம். எங்கள் ஆட்சியில் கல்வியில் பின் தங்கவில்லை. கல்வியைப் பொறுத்தவரை மாநிலப் பட்டியலில் வரவேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து அல்ல. அதே நேரத்தில் கோட்டையை விட்டுவிட்டு, திமுக போன்ற நிறம் மாறுதல் உடம்பை போல நிறத்தை மாற்றிக் கொண்டு வல்லமை படைத்த கட்சி உலகத்திலேயே திமுக தான்” என்றார்.

இதையும் படிங்க: பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 2ல் தொடக்கம்; கலை அறிவியல் கல்லூரிக்கு 8ம் தேதி முதல் விண்ணப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.