சென்னை: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் சென்னை கிண்டி கத்திபாராவில் அமைந்துள்ள பண்டித ஜவஹர்லால் நேருவின் உருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துத் துறை அமைச்சர் சாமிநாதன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், மக்களவை உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.