இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "க. அன்பழகனின் மறைவுக்கு நான் மிகவும் வருந்துகிறேன். பேராசிரியர் என்று அன்போடு அழைக்கப்படும் அவர் தமிழ் பேராசிரியராகத் தனது பணியை தொடங்கினார். பல நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ் மொழியில் நல்ல ஆளுமையையும் நல்ல பேச்சாற்றலையும் கொண்டவர். தனது அரசியல் வாழ்வில் இதுவரை 70 ஆண்டுகள் கடத்திய இவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்பு மறக்கமுடியாதது. அவரது மறைவு தமிழ்நாட்டு மக்களுக்கு பேரிழப்பாகும், குறிப்பாக திமுக தலைவருக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் பெரும் இழப்பாகும்.
பெரும் துக்கத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் ஆத்மா சாந்தி அடையவும், அவரது இந்த இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கும் பலம் கொடுக்கவேண்டி எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க.. அண்ணாவின் 'பேராசிரியர் தம்பி' மறைவு: இறுதி நிகழ்வுகள்...