சென்னை: துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 25) தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பேசிய விசிக சட்டமன்ற குழுத்தலைவர் சிந்தனை செல்வன், "இந்த சட்ட மசோதாவை விசிக வரவேற்கிறது. துணை வேந்தர்கள் நியமனம் என்பது ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் இடையிலானது என்பதை விட ஜனநாயகத்திற்கும், காலனி ஆதிக்கத்திற்கும் இடையிலானது என்று பார்க்கவேண்டும்.
துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ள சுயாட்சி அதிகாரமாக இருக்க வேண்டும். துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும் என்பது மாநில சுயாட்சி மட்டுமல்லாமல் அரசியல் அமைப்பு சாசன மாண்பும் அடங்கியுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை காலி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அமைச்சர்கள் இருக்கக்கூடிய கிரீன்வேஸ் சாலையில் ஆளுநருக்கு வீடு ஒதுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநிலத்தினுடைய பல்கலைக்கழகக் கல்வியுரிமை.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமை - முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி