ETV Bharat / state

நடப்பாண்டிற்கான நல் ஆளுமை விருதுகள் குறித்த அரசாணை வெளியீடு - நடப்பு ஆண்டிற்கான நல் ஆளுமை விருது

நடப்பு ஆண்டிற்கான நல் ஆளுமை விருதுகள் குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

t
tt
author img

By

Published : Aug 12, 2022, 4:59 PM IST

சென்னை: திருநெல்வேலியில் பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்ததற்காக அம்மாவட்ட ஆட்சியருக்கு ’நல் ஆளுமை விருது’ வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ‘நல் ஆளுமை’ விருதுக்குத் தேர்வானவர்களின் விவரங்கள்:

  • சிறகுகள் - செங்கல்கள்: திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கற் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவர்களை மீட்டெடுத்து செங்கற் சூலைகளை அவர்களே நடத்திடும் வகையில் தொழில் முனைவோராக வாழ்க்கை தரத்தை உயர்த்தியது - மாவட்ட ஆட்சியர், திருவள்ளூர் மாவட்டம்
  • திருநங்கைகளின் வாழ்க்கை மாற்றத்திற்கான முன்முயற்சி: செங்கல்பட்டு மாவட்டத்தில் சமுதாயத்தில் மாவட்ட சமூகநல விளிம்பு நிலையிலும் பின்தங்கியவர்களாகவும் அலுவலர், திருநங்கைகளுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து நிலையான வளர்ச்சி இலக்கை அடைய எடுக்கப்பட்ட முன்முயற்சி - மாவட்ட சமூகநல அலுவலர், செங்கல்பட்டு மாவட்டம்
  • மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்: திண்டுக்கல் மாவட்டத்தில் மழை நீர் சேகரிக்கப்பட்டு மூன்று அடுக்குகளாக சுத்திகரிக்கப்பட்டு, தரைமட்டத்தொட்டியில் சேமித்து கழிவறை, கை கழுவுதல், பாத்திரங்கள் போன்றவற்றிற்கு கழுவுதல் பயன்படுத்துவதுடன், மிகைநீரினால் நிலத்தடி நீரும் செறிவூட்டப்படுகிறது - திண்டுக்கல் மாவட்ட மாவட்ட ஆட்சியர்
  • சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளை மீட்டு உருவாக்கி புனரமைத்தல்: சிவகங்கை மாவட்டம், நீர்பிடி மேலாண்மை முகமையில் இருந்த விவசாயிகளின் பங்களிப்புத்தொகை மூலம் 20 JCB இயந்திரங்கள் வாங்கப்பட்டு அதன் மூலம் தற்போது நீர்நிலைகள் தூர்வாருதல், ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் ஆகியவை குறைந்த செலவில் மேற்கொள்ளப்பட்டது- சிவகங்கை மாவட்ட மாவட்ட ஆட்சியர், தற்போதைய இயக்குநர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை
  • தாய்கேர் : நெல்லை திருநெல்வேலி மாவட்டம், நெல்லை மாவட்ட தாய்மார்களின் பேறுகால நலனை தகவல் தொழில்நுட்பங்களின் மூலம் கண்காணித்து திருநெல்வேலி பொது சுகாதார அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டதன் மூலம் பேறுகால இறப்புகளின் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்
  • இ வாடகை: வேளாண் இயந்திர வாடகை கைப்பேசி செயலி- இணையவழி மூலம் வேளாண் இயந்திரங்களை கைப்பேசி செயலியினால் சுலபமாக வாடகைக்கு அமர்த்தி விவசாயிகள் பயன் பெறச்செய்தல் - முதன்மைப்பொறியாளர்,
    தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் துறை
  • காவல் கரங்கள்: சென்னை பெருநகர காவல் துறை, சென்னை பெருநகர காவல் துறையால் ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து, பராமரித்து அவர்களின் முகவரி அறிந்து குடும்பத்தாருடன் இணைப்பது மற்றும் உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வது - ஆணையர், சென்னை பெருநகர காவல் துறை

இதையும் படிங்க: மதுரை உழவர் சந்தைக்கு மத்திய உணவுத்துறை விருது!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.