சென்னை பாடியநல்லூர், பவானிநகர் பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் ராஜவேலு என்பவரின் மனைவி காவேரி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
ஏற்கனவே அதே பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மாடு ஒன்று உயிரிழந்தது. இதுசம்பந்தமாக தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் புகார் மனு தாக்கல் செய்தார்.
2019ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தியின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் துரை.ஜெயச்சந்திரன், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் அஜாக்கிரதையும், கவனக்குறைவுமே காரணம் எனக் கூறி, பலியான காவேரியின் கணவர் ராஜவேலுவுக்கு 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை 4 வாரங்களில் இழப்பீடாக வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: உயிரிழந்த தொழிலாளிக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கேட்டு சேலத்தில் போராட்டம்