- காலமுறை ஊதிய உயர்வு,
- பட்ட மேற்படிப்பில் இடஒதுக்கீடு
உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை முன்னிறுத்தி சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் போராடிவரும் மருத்துவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று சந்தித்து ஆதரவு அளித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் போராடிவருகின்றனர். ஏற்கெனவே அவர்கள் போராடியபோது ஆறு வாரத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் பத்து வாரங்கள் கடந்தும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் அவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். எனவே அரசு உடனடியாக இதில் தலையிட்டு மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
அதேபோல் அனைத்து எதிர்க்கட்சியினரும் மருத்துவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகின்றனர். தேவைப்பட்டால் அரசை எதிர்க்கின்ற குரல்களையும் எழுப்ப வேண்டும்.
திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் என்கிற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டுள்ள சம்பவம் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அக்குழந்தையை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த விஞ்ஞான நவீன யுகத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்க நம்மிடம் கருவி இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. எனினும் மீட்புப் படையினரின் பணியைப் பாராட்ட வேண்டும்.
மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறுகிறார்கள். போராட்டம் என்றால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுவது வழக்கம். அதற்கு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அவர்களை போராடவைக்கத் தூண்டிய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளி விடுமுறை: மது விற்பனை ரூ.455 கோடி!